posted Apr 8, 2012, 10:31 AM by Webteam Karaitivu.org
 காரைதீவு சமூக பொருளாதார அபிவிருத்தி நிறுவனமும்(SEDO) தேசிய தொழில் பயிலுனர் அதிகாரசபையும் (NAITA) இணைந்து நடாத்திய கணணிப்பாடநெறிகளைப் பயின்ற மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் வைபவம் இன்று (2012.04.08) செடோ அலுவலகத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவி திருமதி. பத்மினி பாக்கியராஜா அவர்களின் தலைமையிலும் இணைப்பாளர். திரு.M உதயசூரியன் அவர்களின் வழிப்படுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு பிரதேச செயலாளர் திரு.S.ஜெகராஜன் அவர்களும் கௌரவ அதிதிகளாக காரைதீவு பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் ஜனாப். கலந்தர், காரைதீவு சண்முக வித்தியாலய அதிபர் திரு. R. ரகுபதி மற்றும் SEDO கணணி ஆசிரியர் S.சுரநுதன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
|
|