What's new‎ > ‎

சாயி பாலர் பாடசாலையின் முதலாவது விளையாட்டு விழா - 2012

posted Jul 19, 2012, 10:49 AM by Suranuthan Sothiswaran
சாயி பாலர் பாடசாலை மாணவர்களும், நிருவாகத்தினரும் இணைந்து மலரும் அரும்புகளின் விளையாட்டு விழாவினை 14.07.2012ம் திகதி ஏற்பாடு செய்தனர்.

அதன் தலைவர் திரு. வெ.ஜெயநாதன் தலைமையிலும் பாடசாலை நிருவாகி திருமதி. மாணிக்கரெத்தினம் மற்றும் பெற்றார் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு மு.ரமணீதரன் ஆகியோரின் வழிநடத்தலிலும் சிறப்பாக இடம்பெற்றது.

விழாவின் முதன்மை அதிதிகளாக கலாநிதி. க.கணேசராசா, டாக்டர்.ப.சுரேஸ்குமார் ஆகியோரும், விசேட அதிதிகளாக டாக்டர். சாந்தினி விவேகானந்தராசா, திருமதி. சிவநிதி சிவராசா, திருமதி வி. புவனராசா ஆகியோரும் கௌரவ அதிதிகளாக திரு எஸ். நந்தகுமார், திரு.எல்.ஏ.ரமேஸ்குமார் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சிறுவர்களின் விளையாட்டு நிகழ்வுகள், அதிதிகளின் உரைகள் மற்றும் பரிசளிப்பு வைபவங்கள் என்பனவும்  இடம்பெற்றன.



Photos/Info:Mr.M.Ramaneetharan

Comments