What's new‎ > ‎

சாதனையாளர் பாராட்டு விழா

posted Jun 23, 2010, 10:59 PM by Suranuthan Sothiswaran   [ updated Jun 23, 2010, 11:51 PM ]

இம்முறை நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தினப்போட்டிகளில் உயர்தரப் பிரிவில் கட்டுரையும் இலக்கிய நயமும் எனும் பிரிவில்  அகில இலங்கை ரீதியாக முதலிடத்தையும்  தங்கப்பதக்கத்தினையும் காரைதீவு வரலாற்றில் முதன்முறையாகச் சுவீகரித்துக் கொண்ட காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவி செல்வி அருணா அண்ணாத்துரை அவர்களுக்கான பாராட்டுவிழா இன்று 24.06.02010 நடைபெற்றது. பாடசாலை முதல்வர் திரு வித்தியராஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்   பிரதம அதிதியாக திரு. S. புவனேந்திரன் (உதவிக்கல்விப்பணிப்பாளர்) அவர்களும் விசேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்திச்சங்கச் செயலாளர் திரு.  S. மதியழகன் (நில அளவையாளர் ) அவர்களும் பழைய மாணவர் ஒன்றிய தலைவர் திரு. S. சசிகரன் (கணக்காளர்) அவர்களும் பழைய மாணவர் சங்கச் உப செயலாளர் திரு. S.சிவராஜா அவர்களும் பழையமாளவர் சங்க நிர்வாகக்குழு (ஆசிரியர்) உறுப்பினர்களான திரு. Y.கோபிகாந்த் (திட்ட உத்தியோகத்தர்) மற்றும் திரு S .ஸுரநுதன் (நிர்வாக  உத்தியோகத்தர்)  ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் மாணவியைப் பாராட்டியதுடன் ஏனைய மாணவர்களும் இவரைப் பின்பற்றி பாடசாலைக்கும் கிராமத்திற்கும் பெருமை சேர்க்கவேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர்.

 மேலும்  சாதனையாளருக்கு  பரிசில்களும் அதிதிகளால் வழங்கப்பட்டன. இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் மாணவியைப் பயிற்றுவித்த பிரபல தமிழாசான் பத்மன்  அவர்களையும்  மற்றும் போட்டிக்கு யாழ்ப்பாணத்திற்கு அழைத்துச்சென்ற ஆசிரியர் குழாத்தினையும் படத்தில் காணலாம் . 
Comments