What's new‎ > ‎

சர்வதேச சிறுவர் தின பெருவிழா

posted Oct 6, 2010, 12:52 PM by Suranuthan Sothiswaran
அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் அமைப்பு மனித அபிவிருத்தித் தாபன ஒழுங்கமைப்பில் நடாத்திய  சர்வதேச சிறுவர் தின பெருவிழா இன்று   செவ்வாய்க்கிழமை கிழமை (06.10.10) கல்முனை உவெஸ்லி கல்லூரி திறந்த வெளி அரங்கில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் எம்.எம்.சறுக் தலைமையில் வெகுவிமரிசையாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.இங்கு பிரதம அதிதியான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் நந்திகா இந்திரவன்ச வரவேற்கப்படுவதையும் கல்முனை வலய பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஆர்.சுகிர்தராஜன் உரையாற்றுவதையும்   அதிதிகள் மாணவர்கள்  நிகழ்ச்சிகளைக் கண்டுகளிப்பதையும் மேடையில் சிறுவர் நிகழ்வுகள் இடம்பெறுவதையும் விடியல் நாடகக்குழுவினரையும் படங்களில் காணலாம்.


 


தகவல் படங்கள்  திரு வி.ரி.சகாதேவராஜா
Comments