What's new‎ > ‎

சர்வதேச சிறுவர் தினமும் சிறுவர் உரிமை மீறலின் கசப்பான சம்பவங்களும்

posted Sep 29, 2010, 10:10 AM by Suranuthan Sothiswaran
 
சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுவதற்கான (நடைமுறைப்படுத்துவதற்கான) சகல ஏற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவ்வேளையில் சிறுவர் உரிமைகள் பற்றி ஏன்  அடிக்கடி நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற கேள்வி எழுகின்றது. 

சிறுவர்கள் என்ற தரப்பினர் இரண்டாம் உலக மகா யுத்தம் வரையில் கவனத்தில் கொள்ளப்படாத குழுவினராக காணப்பட்டனர். சிறுவர்களுக்கு பாதுகாப்பு, பராமரிப்பு ஆகியன மிக மிக அத்தியவசியமான தேவையாகும். இச் சந்தர்ப்பத்தில் சிறுவர்கள் பாதுகாக்கப்படுதல் என்பது 1948ம் ஆண்டு ஜக்கிய நாடுகள் சபையின் அனைத்துலக மனித உரிமைகள் சாசனத்தின் வருகையுடனே ஆரம்பித்தது.

 
குறிப்பாக சிறுவர் உரிமைகள் தொடர்பில் 1989ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனம் கொண்டுவரப்பட்டமை ஒரு மைல் கல்லாகும். 1989ம் ஆண்டு பொதுச் சபையினால் கொண்டுவரப்பட்ட சிறுவர் உரிமைகள் சாசனம்  உயிர் வாழ்தல்இ பாதுகாப்புஇ அபிவிருத்திஇ பங்குபற்றல் ஆகிய பிரதான உரிமைகளை உள்ளடக்கிருந்தது.
              

இலங்கை அரசு 1991ம் ஆண்டு சிறுவர் உரிமை சாசனத்தை ஏற்று அங்கீகரித்த போதிலும் கடந்த காலத்தின் அத்தியாயத்தை புரட்டிப் பார்க்கையில் யுத்தம்இ பொருளாதார நெருக்கடிகள்இ போசாக்குப் பற்றாக்குறை போன்ற பல காரணங்களாலும் சிறுவர்களை கடத்தல் மற்றும் மோசடி  போன்ற காரணங்களாலும் பாலியில் ரீதியான வன்முறைகளாலும் சிறுவர் தொழில் போன்ற சுரண்டல்களாலும் ஆயிரக்கணக்கான சிறார்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். 

குறிப்பாக யுத்தத்திற்கு பிந்திய காலத்தில் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்கள் பல்வேறு வடிவங்களில் தலைதூக்கியுள்ளதை அவதானிக்க முடிகின்றது.             

 

கிழக்கு மாகாணத்தை பொறுத்த வரையில் கடந்த வருடங்களில் சிறுவர்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்து வருகின்ற போக்கை அவதானிக்க கூடிய அதேவேளை மலையகத்தை எடுத்துக் கொண்டால், சிறுவர்கள் தொழிலாளர்களாக்கப்படுவதால் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படுகின்ற அதே நேரம் தொடர்ச்சியான மர்ம மரணங்கள், சிறுவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்குகின்றதுடன் இலங்கைச் சமூகம் எதிர்நோக்கும் ஒரு புதிய பிரச்சினையாகவும் மாறியுள்ளது.

அம்பாரை, மட்டக்களப்பு மாவட்டங்களில் அண்மையில் அரச மற்றும் சிவில் அமைப்புக்கள் ஒன்றிணைந்து சிறுவர்களுக்கெதிரான தொடர்ச்சியான வன்முறை பற்றிய கலந்துரையாடலை மேற்கொண்ட போது சிறுவர் உரிமை மீறல்களுக்கு பிரதான காரணங்களாக பின்வருவன இனங்காணப்பட்டன.

 

1.     பெற்றோர்இ பாதுகாவலரின் கவனமின்மை

2.     துஸ்பிரயோகத்தை மேற்கொள்வதற்கான சூழல் அல்லது சந்தர்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தல்

3.     குற்றவாளிக்கு அதிகாரிகள் அல்லது ஒரு சில சமூகப்பெரியோர்கள்; மூலம் பாதுகாப்பு வழங்கல்.

4.     சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாக விழிப்புணர்வின்மை

5.     கலாசார காரணிகள்
 பொதுவாக இன்றைய பொருளாதார நெருக்கடியுடன் பிள்ளைகளை சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்காக பாடுபடும் பெற்றோர்கள் தமது பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதில் கூடுதலான கவனத்தை காட்டுகின்றனர். இதனால் பிள்ளைகளின் பாதுகாப்பு கேள்விக் குறியாகுகின்றது. குறிப்பாக புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளை எடுத்துக் கொண்டால், அதிகளவில் துஸ்பிரயோகங்களுக்குள்ளாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

ஐக்கிய நாடுகளின் சிறுவர் உரிமை சாசனமானது 18 வயதுக்குட்டபட்ட சகலரும் சிறுவர்கள் என்று வரையறுத்த போதிலும் இலங்கையை பொறுத்தளவில் கட்டாயக்கல்வி என்பது 14 வயது வரையில் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பல பாடசாலைகள் ஆரம்பக் கல்வியை மாத்திரம் கொண்டு அமைந்திருப்பதாலும் மேலும் பல்வேறு காரணிகளாலும் மாணவர்கள் பாடசாலைகளிலிருந்து இடைவிலகிச் சென்று சிறுவர் தொழிலாளர்களாக உருவாகும் சிறார்களின் நிலைமைகளை நோக்கும்போது மலையகத்தில் அர்ச்சுனன்இ லோகநாதன்இ லிங்கேஸ்வரன்இ சுமதிஇ ஜீவராணிஇ குமுதினி என்றும் அம்பாரையில் மோ.மதுனுஸ்ரிகா  (12 வயது முட்டை விற்கச் சென்ற சிறுமி ) போன்றவர்களின் தலைவிதி மரணத்தில் முடிவடைந்துள்ளது.

         

 மேலும் இன்றைய சிறார்களை ஆட்டிப்படைக்கும் இன்னொரு காரணியாக கல்விக் கூடங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைகளைச் சுட்டிக் காட்டலாம். பாடசாலைகளிலும்இ தனியார் வகுப்புகளிலும் சென்று மாணவர்கள் ஆசிரியர்களால் பாலியல் ரீதியான சுரண்டல்களுக்குள்ளாகின்றனர். எனவே இத்தகைய நிலமைகளின் போது குற்றவாளிகளாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியவர்கள் உயர் மட்ட அதிகாரிகளினால் பாதுகாக்கப்படுகின்றனர்.

 

இன்று இவ்வாறான பல சம்பவங்களை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறுவர்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளின் அசமந்த போக்கின் காரணமாக குற்றவாளிகள் தப்பித்துக் கொள்கின்றனர். உதாரணமாக பாதிக்கப்பட்ட சிறுவர்கள் சட்ட உதவியை நாடுகின்ற போது தேவைப்படும் ஆவணங்களை பெற்றுக் கொடுப்பதனை தாமதமாக்குதல் உரிய ஆவணங்களை வழங்க மறுத்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

        

 

 கலாசார ரீதியான காரணிகள் இன்று சிறுவர் உரிமை மீறல்களை வெளிக் கொணர்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்து வருகின்றது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சிறுவர்களுக்கெதிராக இடம்பெறும் வன்முறைச் சம்பவங்கள் குடும்பத்தின் கௌரவம்இ அந்தஸ்துஇ பிள்ளையின் எதிர்காலம் ஆகிய காரணிகளைக் கருத்திற் கொண்டு வெளிக்கொணரப்படுவதில்லை.

 

            இலங்கை போன்ற நாடுகளில் சிறுவர் உரிமை மீறல்களுக்கு ஏதுவான காரணிகளுள், மக்கள் சிறுவர்கள் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வில்லாதிருப்பதையும் அதேபோல் சிறுவர்களின் உரிமைகள் மீறப்படும் போது விதிக்கப்படும் தண்டனைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் தெளிவின்மையையும் குறிப்பிடலாம்.

 

எனவே சிறுவர் உரிமைகளை பாதுகாப்பதை கருத்திற்கொண்டு நாளாந்தம் அதிகரித்து வரும் சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களை இல்லாதொழிப்பதை கருத்திற் கொண்டும் சிறுவர் தினத்தை அகில உலகமும் ஒக்டோபர் 1ம் திகதி கொண்டாடிக்கொண்டிருக்கின்ற போது சிறுவர்கள் இவ் உலகின் நாளைய எதிர்காலம் என்பதையும் அனைவரும் மனதில் நினைத்துக்கொண்டு சிறுவர்களுக்கெதிரான உரிமை மீறல்களை இல்லாதொழிக்க உறுதி ப+ணுதல் வேண்டும்.

 

சிறுவர் உரிமைகள் மீறப்படும் போது பல்வேறு சட்ட கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன. சகல பொலிஸ் திணைக்களங்களிலும் இயங்கும் சிறுவர் மற்றும் மகளீர் பிரிவு, தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சிறுவர் பாதுகாப்பு தொடர்பான விசேட அழைப்பு இலக்கம் ……… போன்ற பலரிடமும் சென்று முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். இவ்வாறு பொதுமக்கள் சிறுவர் உரிமைகளை பாதுகாக்கும் தொடர்பில் விழிப்புணர்வுடன் இருக்கும் பட்சத்தில் சிறுவர் உரிமை  மீறல்களை இல்லாதொழிக்கலாம்.

 

திரு.பி.ஸ்ரீகாந் (0773015350இ60672220142)

கிழக்கு மாகாண இணைப்பாளர்

மனித அபிவிருத்தி தாபனம்

 
Comments