What's new‎ > ‎

சர்வதேச சிறுவர் தினம் HDO -2011

posted Oct 1, 2011, 12:23 AM by Suranuthan Sothiswaran
 சர்வதேச சிறுவர் தினம் HDO  -2011

ஒவ்வொரு வருடமும் சர்வதேச சிறுவர் தினத்தை உலகில் உள்ள நாடுகள் பல்வேறு தினங்களில் கொண்டாடி வருகின்றது. எமது நாடு ஒக்டோபர் 01ம் திகதி இச்சிறுவர் தினத்தினை கொண்டாடுகின்றது. 

சிறுவர் துஷ்பிரயோகத்தில் கதைக்கப்படுகின்ற ஒரு மாவட்டமாக அம்பாறை மாவட்டம் இருந்து வருகின்றது. இதிலும் குறிப்பாக அம்பாறை கரையோர பிரதேசத்தில் அதிகமாக காணப்படுகின்றது. இதனை அடையாளப்படுத்தி அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள் கடந்த இரண்டு வருட காலமாக விசேட செயற்திட்டங்களை நிகழ்த்தி வருகின்றது. 

2011ம் ஆண்டு சிறுவர் தினத்தினை முன்னிட்டு மனித அபிவிருத்தி தாபனம் பல்வேறுபட்ட நிகழ்வுகளை நடாத்த திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக விசேட கலந்துரையாடல் கூட்டம் கல்முனை அக்கரைப்பற்று, திருக்கோயில், வெல்லாவெளி, மண்டூh,; சவளக்கடை,  சம்மாந்துறை ஆகிய பொலிஸ் நிலையங்களில் இருந்து சிறுவர் பெண்கள் பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டனர். அத்தோடு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தியோகஸ்தர்கள் மற்றும் ,மனித அபிவிருத்தி தாபன உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர் இங்கு சிறுவர் தொடர்பான கீழ்வரும் பிரச்சினைகள் அடையாளம் காணப்பட்டது.  

01. பாடசாலை இடைவிலகல் 
02. கடுமையான கலாச்சார நிலைப்பாடு 
03. பெற்றோர்கள் இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக காணப்படல் (தாய்) 
04. தொழில் நுட்ப வளர்ச்சி.  கணணி, கையடக்க தொலைபேசி 
05. பொலிஸ் நிலையங்களில் தழிழ் பேசும் பெண் உத்தியோகஸ்தர்கள் (WPC) இன்மை 
06. நன்னடத்தை பிரிவு உத்தியோகஸ்தர்களில் காணப்படுகின்ற பல்வேறு பட்ட குறைபாடுகள் 
இதற்கான தீர்வுகள்:-  

  • பாடசாலை இடைவிலகல் - தொடர்ச்சியான விழிப்புணர்வுகளை பெற்றோர்கள், சிறுவர்கள், பிரதேச மக்கள் ஆகியோருக்கு கிராமம், பாடசாலை, சமூகம் என்ற ரீதியில் வழங்கப்பட வேண்டும். இதனை சிறுவர் தொடர்பாக செயற்படுகின்ற அனைத்து அரச உத்தியோகஸ்தரின் பொறுப்பாகும.; இதே போன்று அரசசார்பற்ற நிறுவனங்கள் அதற்கு ஊக்கமளித்தலும் உதவி செய்தலும் அவசியமாகும். 
 
  • கடுமையான கலாச்சார நிலைப்பாடு:- இப்பிரச்சனையானது சமூகத்தில் இருந்து பிரிக்கமுடியாத ஒன்றாக காணப்படுகின்றது. குறிப்பாக பெண் சிறுவர்கள் அவர்களுடைய எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு பெற்றோhர்கள், கலாசாரப் போர்வையில் மூடி மறைக்கின்றனர். இது தொடர்வதனால் குற்றவாளிகள் குற்றத்திலிருந்து சமூகத்தினாலேயே பாதுகாக்கப்படுகின்றனர். இந்த பாதக தன்மையை சகல மதத் தலைவர்களும், மத அமைப்புகளும் இல்லாவிடின் தங்களுடைய மதம், கலாசாரம் தூய்மையானது எனக் கூறி குற்றவாளிகளை வளர்த்துக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

  • பெற்றோhர்கள் இடம் பெயர் தொழிலாளர்களாக காணப்படுதல் குறிப்பாக ( தாய்) தாய்மார் குழந்தைகளை விட்டு வெளிநாடு செல்வதனாhல் பல்வேறுபட்ட சமூக சீர்கேடுகள்  சிறு வயதில் இருந்து சிறுவர்கள் மத்தியில் உருவாக்கப்படுகின்றது. இதில் பெண் சிறுவர்கள் பாலியல் ரீதியான துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்றனர். தாய்மாhர் வெளிநாட்டு தொழில்களை தேடிச் செல்லும் போது பல அரபு நாடுகள் பொலிஸ் நற்சான்றிதழ்கள்  தேவைப்படுகின்றது. அப்போது பொலிஸ் அப் பெண்ணின் குடும்ப நிலைகளை தேடிப் பார்த்து சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளின் அறிக்கைககளையும் பெற்று அச் சிபாhர்சுகள் மூலம் பொலிஸ் நற்சான்றிதழ் வழங்கப்பட்டால் பல்வேறு பட்ட துஸ்பிரயோகங்களை குறைக்க முடியும்.தொழிநுட்ப வளர்ச்சியினால் சிறுவர்கள் மத்தியில் ஏற்படும் பாதிப்பு:- 


01. விசேடமாக கையடக்க தொலைபேசி மற்றும் இனைய தளங்கள் 

கையடக்க தொலைபேசி மற்றும் இனைய தளங்கள் மூலம் கூடுதலான சிறுவர்கள் பல்வேறுபட்ட துஷ்பிரயோகங்களுக்கு ஆளாகின்றனர். குறிப்பாக பாலியல்,ஒழுக்கமற்ற தன்மை சீர்கேடுகள் அதிகரிக்கின்றனர். 

சிறுவயதில் கையடக்க தொலைபேசிகளை பெற்றோர்கள் வாங்கிக் கொடுப்பது தொடர்பாக மிகவும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். அதே போன்று இணைய தளங்களை பார்வையிடும் சிறுவர்கள் தொடர்பாக கவனத்தில் எடுத்துக் கொதள்ளப்பட வேண்டும். பெற்றோர்களின் கவனக்குறைபாடும் அசமந்தப் போக்கும் இவ்விடையத்தில் நீக்கப்பட வேண்டும்.  


பெற்றோர்கள் எவ்வளவு வேலைபழுவாக இருந்தாலும் தங்களுடைய குழந்தைகளின் மேல் மிக அவதானத்துடன் இருப்பதன் மூலம் இதனை கட்டுப்படுத்த முடியும். அதே போன்று பாடசாலை ஆசிரியர்கள் மேற்படி விடையத்தில் பொறுப்புடன் நடந்து கொள்ளுதல் அவசியமாகும். 

05.  பொலிஸ் நிலையங்களில் தழிழ் பேசும் உத்தியோகத்தர்களின் 
    பற்றாக்குறை 
   

சிறுவர் துஷ்பிரயோகங்களில் பாலியில் ரீதியான  துஷ்பிரயோகங்கள் ஏற்படும் போது கூடுதலாக பெண்  சிறுவர்களே ஆளளாகின்றனர். பொலிஸ் நிலையங்களில் சிறுவர் பெண்கள் பிரிவில் தழிழ் பேசும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர்கள் றுPஊ இல்லாமையால் பல்வேறு பட்ட அசோகரியங்களுக்கு பாதிக்கப்பட்ட சிறுமி ஆளாகின்றால் . 
மேற்படி விடையத்தில் மொழி ஒரு பிரதான பாகமாக காணப்படும் அதே நேரத்தில் தழிழ் மொழி மூலம் கடமையாற்றும் உத்தியேகஸ்தர்களின் பற்றாக்குறை பிரதானமாக காணப்படுகின்றது. 
அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரையில் தமிழ் மொழி மூலம் கூதலான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கள பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் கடமையாற்றுவதால் தழிழ் மொழி சிங்கள மொழிக்கு மொழி பெயர்க்க ஆண் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் உதவும் போது கூடுதலான விடையங்கள் வெளிப்படற்ற தன்மையில் மறைக்கப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நிவாரணம் கிடைப்பதில் பல்வேறுபட்ட சிக்கல்கள் ஏற்படுகின்றது. அதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி உடனடியான முடிவுகள் பெறப்பட வேண்டும். 


  மேலும் சிறுவர் நன்னடத்தை அலகு அதிகாரிகளுக்கு தாமதமின்றி தங்களுடைய வேலைகளை  செய்வதற்கு தகுந்த வாகன வசதிகள் செய்து கொடுப்பது அவசியமாகும். 

   இவ்வாறான விடையங்கள் அமனித அபிவிருத்தி தாபனத்தின் சிறுவர் தினத்தினை ஒட்டிய நிகழ்ச்சியில் பேசித் தீர்மானிக்கப்பட்டது. 


அரச நிர்வாகத்துறையில் கதைக்கப் பெற்ற விடையங்களில் உள்ள குறைபாடுகளை மனித உரிமைகள் ஆணைக்குழு தலையீடு செய்து நிவர்த்தி செய்தல் வேண்டும் என அனைவரினாலும் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஏனைய விடையங்களை அம்பாரை மாவட்ட அரச அரச சார்பற்ற வலைப்பின்னல் அமைப்பின் ஒருங்கினைப்பு நிறுவனமான மனித அபிவிருத்தி தாபனத்தினால் மேற் கொள்ளப்படும் என தீர்மானிக்கப்பட்டது.  

Comments