What's new‎ > ‎

சமாதான நீதவானாக நியமனம்..

posted Jun 15, 2012, 9:28 AM by Suranuthan Sothiswaran

காரைதீவு 11ம் பிரிவு, தேசிகர் வீதியைச் சேர்ந்த திரு முத்துலிங்கம் ரமணீதரன் (ICT Coordinator, Kalmunai Zone) அவர்கள் நீதி அமைச்சினால் அம்பாரை நீதி நிருவாக வலயத்திற்கான ஒரு சமாதான நீதவானாக 2012ம் ஆண்டு முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்புப் பல்கலைக்கழக கணினி விஞ்ஞானப் பட்டதாரியான இவர் சமூக, கலாசார, விளையாட்டு, மற்றும் கல்வி தொடர்பாக ஆற்றிய சேவைகளின் பயனாக இம் நியமனம் கிடைக்கப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழகத்தின் செயலாளர்​, காரைதீவு விவேகானந்தா இலவசக் கல்வி சமூகவள நிலையத் தலைவர், காரைதீவு நேரு சனசமூக நிலையத் தலைவர்,  காரைதீவு பல்லைக்கழக மாணவர்கள் சமூகசேவை ஒன்றியத்தின் செயலாளர், விபுலானந்த மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் இணைச் செயலாளர் போன்ற பதவிளை வகித்துள்ள இவர், தற்பொழுது சுவாமி விபுலானந்நர் ஞாபகார்த்தப் பணிமன்றத்தின் கௌரவ பொருளாளர், காரைதீவு வைத்தியசலை அபிவிருத்திச் சபையின் கணக்காய்வாளர்,  கரைதீவு பல்லைக்கழக மாணவர்கள் சமூகசேவை ஒன்றியத்தின் கௌரவ போசகராகச் செயற்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Photos/Information: Vivekananda Sports Club, Karaitivu

துடிப்பான இளம் சேவகரான திரு. M. ரமணீதரன் அவர்களின் பணி தொடர எமது வாழ்த்துக்கள் -karaitivu.org WebTeam

Comments