What's new‎ > ‎

சமாதான நீதவானாக கௌரவிப்பு

posted Jun 14, 2012, 7:33 AM by Suranuthan Sothiswaran
காரைதீவைச்சேர்ந்த சமூக சேவையாளர் வெற்றிவேல் ஜெயநாதன் அவர்கள் அகில இலங்கைக்குரிய சமாதான நீதவானாக பதவியளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். கல்லடி சிவானந்தாவின் பழைய மாணவனான இவர் அங்கு மாணவர் மேற்பாவையாளராக (Brother) கடமையாற்றினார். பின்னர் ஆசிரியப்பணியில் இணைந்து , பலகாலம் காரைதீவு சண்முகா மகாவித்தியாலயத்தின் அதிபராகக்கடமையாற்றி அப்பாடசாலையின் அபிவிருத்திக்கு காத்திரமான பங்காற்றியமை குறிப்பிடத்தக்கது. காரைதீவு கோட்டக்கல்வி அதிகாரியாகவும், சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்த மணிமண்டப சபை,  சுவாமி விபுலானந்தர் ஞாபகார்த்தபணிமன்றம், போன்றவற்றிலும் பதவிகள் வகித்தவர். தற்போது காரைதீவு சாரதா சிறுமியர் இல்லப் பொறுப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். அன்னாரின் சேவையைப்பாராட்டி காரைதீவு பிரதேச செயலகம் "விபுலநேசன்"எனும் விருதளித்தமை குறிப்பிடத்தக்கது. அன்னாரின் பணிகள் தொடர நாமும் இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்
Comments