What's new‎ > ‎

அடுத்த வாரம் 3000 பேருக்கு அதிபர் நியமனம்

posted Sep 13, 2012, 2:17 AM by Arunsanth Thadsanamoorthy
                                                                           

இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் மே மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டிய இலங்கை அதிபர் சேவை தரம் 2ii மற்றும் தரம் 3 ஆகிய பதவிகளுக்கு 3000 ஆசிரியர்கள் அடுத்த வாரம் அதிபர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இந் நியமனம் தாமதிக்கப்பட்டு வருவது குறித்து இன்று கல்வியமைச்சுடன் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவர் வி.ரி.சகாதேவராஜா கலந்துரையாடியபோது மேற்படி பதில் கிட்டியது.
இவர்களுக்காள நியமனக்கடிதங்கள் தயாராகி விட்டதாகவும் எதிர்வரும் வாரத்தில் கொழும்பில் விழாவொன்றை வைத்து அதில் இவற்றை வழங்கவிருப்பதாகவும் கூறப்பட்டது.
இப்பதவிக்கான செயற்படும் காலம் 26.01.2012 இல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தரம் 2 இல் 2000 பேரும் தரம் 3 இல் 1000 பேரும் கடந்த மாதங்களில் நடாத்திய நேர்முகப்பரீட்சையினடிப்படையில் தெரிவாகியுள்ளனர்.
இதேவேளை.தரம் 3 அதிபர் சேவை நேர்முகப்பரீட்சைக்கு தோற்றத்தவறியோருக்கு எதிர்வரும் 17ம் திகதி திங்கட்கிழமை அறுதி நேர்முகப்பரீட்சை நடாத்ப்படவிருக்கிறது.எனவே சம்பந்தப்பட்டவர்கள் திங்கள் காலை சென்று கலந்துகொள்ளமுடியும் என தலைவர் சகா தெரிவித்துள்ளார்.
Comments