What's new‎ > ‎

அம்பாரை மாவட்ட பிரதேச சபைகளில் காரைதீவு பிரதேச சபை முதலிடம்

posted Apr 20, 2011, 9:43 PM by Web Team   [ updated Apr 21, 2011, 2:35 AM ]
ஐரோப்பிய ஓன்றிய நிதியுதவியுடன் அம்பாரை மாவட்டத்தில் ஐக்கிய நாடுகள் செயற்றிட்ட சேவைகளுக்கான நிலையத்தினால் (UNOPS) நடை முறைப்படுத்தப்பட்டு வரும் சுற்றாடல் மீள்கட்டமைப்பு வேலைத்திட்டத்தின் (ERP) கீழான திண்மக்கழிவு முகாமைத்துவ செயற்றிட்டத்தினை அமுல்ப்படுத்தி வரும் கல்முனை மாநகரசபை, காரைதீவு பிரதேச சபை, சமாந்துறை பிரதேச சபை, நிந்தவூர் பிரதேச சபை, தெகியத்தகண்டிய பிரதேச சபை, அம்பாரை நகர சபை, பொத்துவில் பிரதேச சபை, திருக்கோயில் பிரதேச சபை, அக்கரைப்பற்று மாநகரசபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய 11  உள்ளுராட்சி மன்றங்களுக்கிடையே நடைபெற்ற சிறந்த திண்மக் கழிவு முகாமைத்துவத்தினை அமுல்படுத்தும் உள்ளுராட்சி மன்றத்துக்கான மீளாய்வு போட்டியில் சிறந்த திண்மக்கழிவகற்றல், சிறந்த சேவைக்கட்டணம் அறவிடல் மற்றும் சிறந்த திண்மக்கழிவு முகாமைத்துப் பிரிவு ஆகிய தலைப்புகளில் கீழ் (UNOPS) நிறுவனத்தினால் தெரிவு செய்யப்பட்டதுடன் ஒட்டுமொத்தமான திண்மக் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளில் (UNOPS) நிறுவனத்தின் மதிப்பீட்டின் அடிப்படையிலும் பங்குகொண்டவர்களின் தெரிவின் அடிப்படையிலும் காரைதீவு பிரதேச சபை முதலிடம் பெற்றுள்ளது. 



Comments