What's new‎ > ‎

Amparai Karaitivu flood - Exclusive report

posted Jan 12, 2011, 10:13 AM by Suranuthan Sothiswaran   [ updated Jan 12, 2011, 10:39 AM ]
காரைதீவு பிரதேசத்தில் மழை மற்றும் வெள்ள நிலைமைகள்

தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினால் பாதிக்கப்பட்டிருந்த காரைதீவு பிரதேசமானது நேற்று வளத்தாப்பிட்டியில் அமைந்திருந்த குளம் உடைப்பெடுத்ததால் வெகுவாக பாதிக்கப்பட்டது. புதிதாக கார்பட் வீதியாக அமைக்கப்பட்டுள்ள  அக்கரைப்பற்று – மட்டக்களப்பு நெடுஞ்சாலையின் பல்வேறு இடங்களிலும் நீர் குறுக்கறுத்துப்பாய்ந்தது. பெருமளவிலான சல்வீனியா மற்றும் ஆத்துவாழை இனத்தாவரங்கள் அடித்துவரப்பட்டிருந்தன.  காரைதீவு கண்ணகை அம்மன் கோவிலுக்கு முன்பாகவும், தச்சா சந்தியிலும், தற்போது பொதுச்சந்தை அமைந்துள்ள பிரதேசத்திலும் 1 ½ அடிக்கு மேலாக நீர் பாய்ந்தது. இதன்போது  மேலும் இரவு நீர் வரத்து அதிகமாக இருந்தது அவதானிக்கப்பட்து. நள்ளிரவு சுமார் 12.00 மணியளவில் காரைதீவு கண்ணகி அம்மன் ஆலய பிரதான வாயில் வரை நீர் வந்து காணப்பட்டது.. மேலும் வெள்ள நீர் காரணமாக காரைதீவு கந்தசுhமி கோவில் வீதியில் சில இடங்களில் 1 அடிக்கு நீர் ஓடிக்கொண்டிருக்கின்றது.


இன்று (12.01.2010) அம்மன் கோவில் முன்பாக நீர் வீதியைக்கடக்காத போதிலும் ஏனைய இடங்களில் நீர் வரத்து இருந்தது. வெட்டுவாய்காலினூடாக அசுரவேகத்தில் நீர் சென்று முகத்துவாரத்தினை அடைந்து கடலுடன் சங்கமமாகின்றது. இந்த இடத்திலும் நீர் பரவும் பிரதேசங்களிலும் மீன்பிடி சிறப்பாக காணப்படுகின்றது. 10.01.2011ம் திகதிய வீரகேசரி செய்தியின்படி காரைதீவு பிரதேச செயலகப்பிரிவில் 4672 குடும்பங்களைச்சேர்ந்த் 18,474 பேர் பாதிப்படைந்துள்ளதாக பதில் பிரதேச செயலாளர் திரு. சி. ஜெகராஜன் தெரிவித்ததாக பிரசுரிக்கப்பட்டுள்ளது. . சுமார் 1000 குடும்பங்கள்  இகி.மி ஆண்களய் பாடசாலை, விபுலானந்த மத்திய கல்லூரி, சாபீனா வித்தியாலயம்  மற்றும் சிவன்கோவில் அருகில் அமைந்துள்ள ஈஸ்வர சனசமுக நிலையம் என்பவற்றில் தஞ்சமடைந்துள்ளனர். இவ்வெண்ணிக்கைகள் நேற்றைய வெள்ளப்பெருக்குடன் மேலும் அதிகரித்திருக்கும


காரைதீவில் மிகவும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக குளவெளிப்பிரதேசத்தை அண்டிய சுனாமி வீடமைப்புத்திட்டம், பாரதி வீதியை அண்மித்த காரைதீவு – 06, காரைதீவு -8 ல் விக்கினேஸ்வரா விதியாலயத்திற்கு அண்மையிலுள்ள சுனாமி வீடமைப்புத்திட்டம் ஆகிய  பிரதேசங்களைக்குறிப்பிடலாம். காரைதீவு -10, 11, 12, காரைதீவு -01 மற்றும் காரைதீவு 07ன் மேற்குப்புறம் மற்றும் கரைச்சையை அண்டிய காரைதீவு -02,03,04 பிரதேசங்களும் பாதிப்புக்குள்ளாயின. எவ்வாறாயினும் மழை நீர் நிரம்பி நீர் ஓட வழி இல்லாத்தால் காரைதீவில் உள்ள ஏனைய பிரதேசங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. பொதுவாக எடுத்து நோக்கினால் காரைதீவில் உள்ள 17 கிராமசேவையாளர் பிரிவுகளும் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் அரச மற்றும் தனியார் நிறுவன ஊழியர் தவிர்ந்;த ஏனைய மக்களின் அன்றாட ஜீவனோபாயமும் ஓரு வாரமாக வெகுவாக தடைப்பட்டுள்ளது. பிரதான வீதியின் மேற்புறமிருந்த ஆதிபவான் உணவகம், தர்சன் வீடியோ சென்டர் உட்பட பல்வேறு வியாபார ஸ்தலங்களுக்குள் நீர் புகுந்ததால் அவர்களின் வியாபாரம் தடைப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்ககு பிரதேச செயலகம் மூலம் சமைத்த உணவு வழங்கப்படுவதுடன் காரைதீவு விளையாட்டுக்கழகம் மற்றும் றிமைன்டர் விiயாட்டுக்கழகம் மக்களுக்கு சமைத்த உணவை வழங்கினர். அரசியல் பிரமுகர்களும் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதைக் காணக்கூடியதாக உள்ளது.  அரச நிவாரணங்கள் மேலும் வழங்கப்படுவதை மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


இன்றும் மழை தொடர்ந்து பெய்து கொண்டிருப்பதுடன் இந்த மழை எப்போது நிற்கும் என மக்கள் அங்கலாய்க்கின்றனர். பொங்கலுக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கையில் சூரியதேவனுக்கு நன்றி செலுத்த வருணதேவன் வழிவிடவேண்டும் என அனைவஐம் பிராத்திப்போமாக.


கர்ரைதீவு.ஓர்கிற்காக காரைதீவு மண்ணிலிருந்து Sothiswaran Suranuthan

Comments