What's new‎ > ‎

அமரர் வெற்றிவேல் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ண கிறிக்கட் சுற்றுப்போட்டி

posted Nov 1, 2009, 1:26 AM by Suranuthan Sothiswaran
நேற்று விறுவிறுப்பாக நடைபெற்ற போட்டியில் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. சீரற்ற காலநிலை காரணமாக 18 ஓவர்கள் கொண்டதாக நடாத்தப்பட்ட இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய காரைதீவு  விளையாட்டுக்கழகம் 17 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையுமு; இழந்து 129 ஓட்டங்களைப் பெற்றது. பின்னர் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா விளையாட்டுக்கழகததின் சார்பில் அதன் தலைவர் சோபிதாஸ் அதிரடியாக துடுப்பெடுத்தாடி தனது அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றார். இறுதியில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து விவேகானந்தா விளையாட்டுக்கழகம்வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக சோபிதாஸ்  தெரிவு செய்யப்பட்டார். இடையில் மழை குறிக்கிட்டபோடும் வீரர்கள் மழையையுமு; பொருட்படுத்தாது விளையாடியமை குறிப்பிடத்தக்கது.

Comments