What's new‎ > ‎

அமரர் உயர்திரு. கை.கிருபேந்திரா அவர்களின் நினைவுக்கவிதை:

posted Oct 15, 2012, 11:21 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 15, 2012, 11:25 AM ]
இலங்கையின் காரைதீவில்  பிறந்தவரும், கனடாவில் வசித்தவருமான அமரர் உயர்திரு. கைலாயபிள்ளை கிருபேந்திரா அவர்களின் 50 வது பிறந்த நாளை நினைவுகூருமகமாக  கனடாவாழ் காரைதீவு மக்கள் ஒன்றியத்தினரால் வழங்கப்படும் நினைவுக்கவிதை:


கீழ்வான் சிவந்து கிழக்கு வெளுக்கின்ற
வான்புகழ் காரைதீவில் வந்துதித்த நல்மணியே!
காண்பவர் மனங்களெல்லாம் களிநகை புரிகின்ற
மாண்புறு மனங்கொண்ட மாசற்ற நல் முகமே!

ஆண்டுகள் பலகடந்தும் ஆயுளின் நிலைதுறந்தும்
மாண்புடன் நிலைத்து வாழும் மங்காப் புகழோனே!
நீண்ட நாள் பழகினாலும் நிமிடங்கள் பழகினாலும்
பூண்டிட்ட நட்பிற்காய் புகழ்கிடைக்க நடந்திடுவாய்!

அன்னைத் தமிழுக்கு அணிகலன் பூட்டிவிட்ட
மண்ணாம் காரைதீவின் மாண்புக்கு இலக்கணமாய்!
இன்னும் பலர் சொல்லும் இலக்கணமாய் வாழ்ந்துகாட்டி
விண்ணிற் கேறிவிட்ட வீரத்தமிழ் மகனே!

உன்னை நினைக்ககையிலே உள்ளம் கலங்குதடா
ஊரும் நினைக்குதடா உன்னருமை பெருமைகளை
தன்னையுருக்கி தந்த ஒளி பயன்கொடுத்தால்
அந்த மெழுகுதிரி அடையும் பெருமகிழ்வாம்!

உன்னுடன் வாழந்தநாட்கள் ஓர்மம் நிறைந்தவைதான்
பண்ணுடன் நீபகர்ந்த பாசமன்பு கொடியதடா
இன்னுமதுவேணுமென்றால் நாம் எங்குசென்று தேடுவது - நீ
விண்ணுலகம் சென்றபின்பும் வேண்டுகிறோம் உந்தனன்பை!

ஆன்மவொளிக் கடல்தன்னில் ஆழமூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சம் பயமெல்லாம் அறவே கிடையாதாம் - வாழ்வை
துச்சம் என நினைத்து துயரின்றி வாழந்ததனால்
மிச்சம் வருமென்று வீண்வாழ்வு வாழாத பச்சைத்தமிழன் நீ.

உந்தனின் கொள்கையென்றும் உயரத்தில் நிலைத்துநிற்கும்
சிந்தையில் நிறைந்திருக்கும் சிலைபோல் நீ இருப்பாய்
விந்தையாய் விதையாய்  வியப்புறு தந்தையாய்தனயனாய்
நண்பனாய்நாயகனாய் நல்வாழ்வு வாழ்ந்த நல்லவனே கிருபேந்திரா!!!!

காரைதீவு மக்கள் ஒன்றியம் - கனடா.


Info:Mr.K,Kegatheeswaran
Secretary KPAC

Comments