What's new‎ > ‎

அமரர்களான மோகன் - கணேஸ் ஞாபகார்த்தக் கிண்ணக் கடினபந்து கிரிக்கட் தொடர் - 2012 இறுதிப் போட்டி

posted Jul 16, 2012, 5:24 AM by Amareeshan Narendran   [ updated Oct 18, 2012, 7:57 AM by Suranuthan Sothiswaran ]


அமரர்களான மோகன் - கணேஸ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்து சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டியில் காரைதீவு விளையாட்டுக் கழக அணியினர் 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்று மோகன் - கணேஸ் ஞாபகார்த்தக் கிண்ணத்தை முதலாவதாக சுவீகரித்துக்கொண்டது. காரைதீவு விவேகானந்தா அணியினருடனான இறுதிப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணியினர் சகல விக்கட்டுக்ளையும் இழந்து 96 ஓட்டங்ளைப்பெற்றனர். (சோபிதாஸ் 19, ராகவன் 12, பந்துவீச்சில் சுலக்சன் 3/7, மதி 3/8, கரன் 2/25) பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டுக்கழக அணியினர் 3 விக்கட்டுக்ளை மாத்திரம் இழந்து குறித்த இலக்கை அடைந்து வெற்றிபெற்று ஞாபகார்த்தக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டனர். (திலிபதாஸ் 34, லோகதாஸ் 26 வசீகரன் 22, பந்துவீச்சில் தனு 2/17)​

போட்டியின் சிறப்பாட்டக்காரர்          - திலிபதாஸ்​

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீர்ர் - சோபிதாஸ்

தொடரின் சிறந்த பந்துவீச்சாளர்   - மதி

தொடரின் சிறந்த களத்தடுப்பு வீர்ர் - பிரகீலன்

தொடரின் சிறந்த நடுவர்          - ரமணீதரன்

ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டு அவர்களுக்கான வெற்றிக் கேடயங்களும் அதிதிகளினால் வழங்கப்பட்டது.

PicasaWeb Slideshow


Comments