What's new‎ > ‎

அமரர்களான மோகன் - கணேஸ் ஞாபகார்த்தக் கிண்ணக் கடினபந்து கிரிக்கட் தொடர் - 2012

posted Jul 11, 2012, 10:34 AM by Suranuthan Sothiswaran   [ updated Oct 18, 2012, 7:57 AM ]



அமரர்களான மோகன் - கணேஸ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்து சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியானது எதிர்வரும் 14.07.2012 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு காரைதீவு கனகரெத்தினம் விளையாட்டு அரங்கில் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. அணிக்கு இருபது ஓவர்கள் கொண்ட இச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு காரைதீவு விளையாட்டுக் கழக அணியினரும், காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழக அணியினரும் தெரிவாகியள்ளனர். நான்கு அணிகள் பங்குபற்றிய இச்சுற்றுப்போட்டியில் சிறப்பான முறையில் போட்டிகளில் வெற்றிபெற்று இவ் அணிகள் இறுதிப் போட்டிக்குத் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இவ் இறுதிச் சுற்றுப்போட்டியின்

முதன்மை அதிதிகளாக

திரு. எஸ்.நேசராசா (உத்தரவுபெற்ற நில அளவையாளர்)

திரு. எஸ். விவேகானந்தராசா (பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்)

திரு. ரி. நளிராஜ் (பாடசாலைகள் வேலைகள் அதிகாரி)

திரு. எம். வரதராசன் (புள்ளிவிபர உத்தியோகத்தர்)

திரு. எம். கருணாநிதி (தொழில்நுட்ப உத்தியோகத்தர்) ஆகியோரும்

 

சிறப்பு அதிதிகளாக

திரு. எல்.ஏ. ரமேஸ்குமார், தலைவர், விவேகானந்தா விளையாட்டுக் கழகம்

திரு. எஸ். நந்தகுமார், தலைவர், காரைதீவு விளையாட்டுக் கழகம்

திரு. ஈ. பகீரதன், தலைவர், ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகம்

 

ஆகியோரும் பங்குபற்றவுள்ளனர்.

இறுதிப்போட்டியில் வெற்றிபெறும் அணிக்கான வெற்றிக் கிண்ணமும், தொடரின் சிறந்த துடுப்பாட்டவீரர், சிறந்த பந்துவீச்சாளர், சிறந்த சகலதுறை ஆட்டக்காரர், சிறந்த களத்தடுப்பாளர், சிறந்த நடுவர் ஆகியோர்களுக்கான வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்படவிருக்கின்றன

Comments