What's new‎ > ‎

அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண தொடரின் இரண்டாவது போட்டி

posted Jul 3, 2012, 2:21 AM by Suranuthan Sothiswaran

அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட் தொடரின் இரண்டாவது போட்டி சமனிலையில் முடிவுற்றது.


காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக் கழக கிரிக்கட் அணியினரை எதிர்கொண்ட ஜொலி கிங்ஸ் கிரிக்கட் அணியினர் கடைசிப் பந்துவீச்சில் 06 ஓட்டங்ளைப் பெற்று போட்டியை சமநிலைக்கு இட்டுச்சென்றனர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய விவேகானந்தா அணியினர் 09 விக்கட்டுக்களை இழந்து 149 ஓட்டங்ளைப் பெற்றனர் சோபிதாஸ் 64, ராகவன் 34, ஆனந்தன் 16, பந்து வீச்சில் மகிந்தன் 2/34  திவாகரன் 2/42 ) பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜொலி கிங்ஸ் அணியினர் 20 ஓவர்களில் 05 விக்கட் இழப்பிற்கு 149 ஓட்டங்ளைப் பெற்று போட்டியினை சமன்செய்தது. (திவாகரன் 34, மகிந்தன் 28, குகசாந் 25,   பந்துவீச்சில் மனோ 3/38 )








Comments