What's new‎ > ‎

அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட் தொடரின் ஐந்தாவது போட்டி

posted Jul 9, 2012, 10:05 AM by Suranuthan Sothiswaran

அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட் தொடரின் ஐந்தாவது  போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழக அணியினர் வெற்றி பெற்றனர்.



08.07.2012 ம் திகதி பி.ப. 2.30 மணிக்கு இடம்பெற்ற போட்டியில் கண்ணகி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டு 7 விக்கட்டுக்களால்  வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய கண்ணகி விளையாட்டுக்கழக அணியினர் 71 ஓட்டங்ளை மாத்திரம் பெற்றுக்கொண்டது ( ராஜபவன் 22, நோயல் 11, பந்துவீச்சில் விஜய் 3/15, மதி 2/4, நிரஞ்சன் 2/14, திலிபதாஸ் 2/20) பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய காரைதீவு விளையாட்டுக்கழக அணியினர் 3 விக்கட் இழப்பிற்கு 72 ஓட்டங்ளைப் பெற்று 7 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றனர். (லோகதாஸ் 25, பிரகீலன் 14, பந்துவீச்சில் புஸ்பா 2/17)

இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகம் மற்றும் காரைதீவு விளையாட்டுக் கழகம் என்பன தெரிவாகியுள்மை குறிப்பிடத்தக்கது.

Comments