What's new‎ > ‎

அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட் தொடர்

posted Jul 9, 2012, 9:58 AM by Suranuthan Sothiswaran

அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட் தொடரின் மூன்றாவது  போட்டியில் விவேகானந்தா அணியினர் வெற்றி பெற்றனர்.

02.07.2012 ம் திகதி மு.ப. 9.00 மணிக்கு இடம்பெற்ற போட்டி ஒன்றில் கண்ணகி விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டு 191 ஓட்டங்ளைப் பெற்று 65 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. ( விஸ்கரன் 64, சோபிதாஸ் 32, கஜன் 15 பந்துவீச்சில் மோகன் 2/31) பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய கண்ணகி அணியினர் 126 ஓட்டங்ளை மாத்திரம் பெற்றது. (டினஸ்ரன் 39, மோகன் 27 பந்துவீச்சில் எழில் 3/14, மனோ 2/14)


அமரர்களான மோகன் – கணேஷ் ஞாபகார்த்தக் கிண்ண கடினபந்துக் கிரிக்கட் தொடரின் நான்காவது  போட்டியில் காரைதீவு விளையாட்டுக்கழக அணியினர் வெற்றி பெற்றனர்.

02.07.2012 ம் திகதி பி.ப. 2.30 மணிக்கு இடம்பெற்ற போட்டியில் ஜொலி கிங்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்கொண்டு 150 ஓட்டங்ளைப்பெற்று 64 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. (லோகதாஸ் 56, விஜய் 19, சுலக்சன் 18, பந்துவீச்சில் திவாகரன் 4/12, ஆதர்சன் 3/20 ) பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய ஜொலி கிங்ஸ. அணியினர் 83 ஓட்டங்ளை மாத்திரம் பெற்று தோல்வியைத் தழுவியது. (திவாகரன் 23, கஜன் 23, ஆதர்சன் 10, பந்துவீச்சில் மதி 

3/12, சுலக்சன் 2/11)



Photos/Information  : Mr.M.Ramaneetharan



Comments