What's new‎ > ‎

அமரர் ச. வெற்றிவேல் (இளைப்பாறிய அதிபர்) ஞாபகார்த்த சுற்றுத் தொடர்

posted Oct 24, 2009, 8:42 AM by Web Team
அமரத்துவமடைந்த   ச. வெற்றிவேல் (இளைப்பாறிய அதிபர்) அவர்களின் ஐந்தாம் ஆண்டு நினைவாக அம்பாரை மாவட்டத்திலுள்ள தமிழ் கடினபந்து கழகங்கள் மூன்றில் முதன்மையான கழகங்களாக கருதப்படக்கூடிய காரைதீவு விளையாட்டுக்கழகத்திற்கும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கும் இடையே நடாத்தப்படும் 3 போட்டிகள் கொண்ட சுற்றுத்தொடரின் முதலாவது போட்டி இன்று (24-10-200) காரைதீவு கனகரெத்தினம் மைதானத்தில் நடைபெற்றது. இதன்போது விளையாட்டு வீரர்கள் அதிதிகளுக்கு அறிமுகம் செய்து வைக்கப்படுவதையும் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுவதையும் ஆட்டநாயகன் வ.திலீபதாஸ் இற்கு பரிசு வழங்கப்படுவதையும் ஆதரவாளர்களையும் படத்தில் காணலாம். கடந்த வருடங்களைப்போலல்லாது இம்முறை இரண்டு கழக வீரர்களும், தமக்கிடையே சுமூகமாகவும் நட்புறவுடனும் விளையாடியிருந்தது ஓரு நல்லவிடயமாகும். மேலும் ஆதரவாளர்களும்  கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டமை பாராட்டுக்குரியதாகும். இவ்விரு தலைசிறந்த கழகங்களுக்கிடையிலான போட்டிகள் இனிவரும் காலங்களிலும் தொடரவேண்டும் என்பது அனைத்து விளையாட்டு ரசிகர்களினதும் அவா .





















From our Editors.
Comments