முத்தமிழை முத்தமிடும் முதுபெரும் ஊர் புத்தகங்களுக்கு புகழ்சேர்க்கும் புத்திஜீவிகளின் பெருநிலம் யாழ்நூல் யாத்தவனை யாவரும் அறிந்தவனை பெற்றெடுத்த புமி கையில் சிலம்பெடுத்து கற்பு மொழி போதித்த கண்ணகியின் காதல் நிலம் சித்தரென சமாதிசென்ற சித்தானைக்குட்டியாரின் சிறப்பு சொல்லும் செழுநிலம் ஆடி விளையும் நெல் நிலங்களும் அள்ளித்தரும் கடலாளும் கட்டித்தழுவும் கலை நிலம் இத்தனை சிறப்புக்களிலும் இன்னோர் பெருஞ்சிறப்பு இன்டர்நெட் உலகில் - நம் இணைய தோழனின் பிறப்பு புலம்பெயர் வாழ்விடமெல்லாம் புகுந்தெழுந்து வலம்வரும் ஊரெல்லாம் வண்ணம்புசி உறவுகளை ஒன்றுசேர்க்கும் உத்தமனின் உதயம்... தகவல் தொழில்நுட்பத்தில் தமிழன்னை பெற்றெடுத்த தவப்புதல்வனின் வருகை எண்ணற்ற தளங்களில் இவனது வருகை ஒரு எதிர்பாராத திருப்பம் கண்ணற்ற கலியுகத்தில் இவனில் எனக்கு விருப்பம் மரணச்செய்தி முதல் மற்ற செய்திகள் வரை தருணத்தில் தந்திடுவான் தவறாமல் வந்திடுவான் உண்மைகளை உரக்கச்சொல்வான் ஊழல்களை உறுக்கி கேட்பான் உதவாமல் உழறல்களை ஓருபோதும் செய்யமாட்டான் இவன், கிழக்கிலங்கையின் ஒரு கிராமத்துச்சித்திரம் இணையற்ற காரையுரின் இணைய வடிவம் இணைய உலகில் ஒரு இலக்கியம் படைப்பு வலைப்புக்களில் வந்து மொய்த்த வண்ணத்துப்புச்சி இவன் இன்ரநெட் உலகைச்சுற்றிவரும் இளைய நிலா இயல் இசை நாடகம் காட்டும் இன்பத்தமிழ் மேடை புயல் வெள்ள நேரத்தில் வந்த புங்காற்று தேடல் உலகில் இவன் ஒரு தேவதையின தரிசனம் தமிழுக்கு சேர சோழ பாண்டியரும் செய்யாத பெருஞ்சிறப்பு என்னவன் பற்றி எழுது நீ ஒரு பாட்டு எல்லோரும் சேர்ந்து பாட ஒடிச்சென்று ஊரைக்கூட்டு! இரண்டு வயது குழந்தையென எழுந்து வாறான் என் தம்பி கூடிச்சேர்ந்து கொண்டாடி ஆடிப்பாடி அடி கும்மி வருகின்றவன் வழியெல்லாம் வண்ணப்புக்கள் போட்டு வணக்கம் சொல்லி பாட்டுப்பாடி வரவேற்று அடி கும்மி எட்டுத்திக்கும் ஒலிக்கட்டும் எட்டாத்திசைக்கும் கேட்கட்டும் என்தோழன் எழில் பாடி எழுந்துநின்று அடி கும்மி அன்புத்தமிழ் பொங்கட்டும் துன்பமெல்லாம் மங்கட்டும் தூயவனை தூக்கியெடுத்து தோழில் போட்டு அடி கும்மி நம்மூரின் புகழ் பரவ நாயகனை நாடு சொல்ல தன்னிகரில்லா தமிழ் மகனை தமிழில் பாடி அடி கும்மி வங்கக்கடல் வாய்மூட சங்கத்தமிழ் சந்தம் போட தங்கத்தில் தோரணம் போட்டு தம்பியானுக்கு அடி கும்மி... |
What's new >