What's new‎ > ‎

65 வது சுதந்திரதின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் காரைதீவில் வெகுவிமர்சியாக இடம் பெற்றது

posted Feb 3, 2013, 11:14 PM by Sulecshan Logaraju
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 65 வது சுதந்திரதின அம்பாரை மாவட்ட நிகழ்வுகள் முதன் முதலாக காரைதீவில் வெகுவிமர்சியாக இடம் பெற்றது . இதனை காரைதீவு பிரதேச செயலகமும் , 631 வது படைப்பிரிவும் இணைந்து மிகவும் சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு நிகழ்வுகள் வெகுவிமர்சியாக இடம் பெற்றன. இதற்கு பிரதம அதிதியாக அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கௌரவ அசங்க அபேவர்தன அவர்களும் ,காரைதீவு பிரதேச செயலாளர் சிவ. ஜெகராஜன் அவர்களுடன் முப்படை உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட உயர் அதிகாரிகள் பிரதேச செயலக உதியோகத்தர்கள் சர்வமத தலைவர்கள்  மாவட்ட , பிரதேச பாடசாலை அதிபர்கள் , ஆசிரயர்கள் , மாணவர்கள் , பிரதேச சமூக நலன்புரி அமைப்புக்கள்  போன்றவற்றின் ஒத்துழைப்புடன்  வெகுவிமர்சியாக இடம் பெற்றது. இன் நிகழ்வின் போது அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கௌரவ அசங்க அபேவர்தன அவர்களால்  தேசியக் கொடி ஏற்றலுடன் தேசிய கீதமும் இசைக்கப்பட்டது. பாடசாலை மாணவர்களின் பாண்டு வர்த்தியம் முழங்க  பாடசலை மாணவர்கள் , விளையாட்டுக்கழகங்கள் ,பிரதேச இளைஞர் அமைப்புகளின் அணிவகுப்புக்களும் காண்பவர் கண்கவரும் வண்ணமாக அமைந்தன.


PicasaWeb Slideshow




Comments