What's new‎ > ‎

4வது அகவையில் காரைதீவு.ஓர்க் இணையத்தளம்

posted Mar 20, 2012, 11:24 AM by Suranuthan Sothiswaran   [ updated Apr 6, 2012, 2:13 AM ]




  எமது இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டு 20-03-2012 உடன் நான்கு வருடங்கள் பூர்த்தியடைந்திருப்பதையிட்டு பெருமிதமடைகிறோம். இவ் இணையத்தளத்தை அமைத்ததன் நோக்கங்களை குறிப்பிட்ட அளவிலாவது பூர்த்தி செய்யக்கூடியதாயிருந்ததையிட்டு எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் இவ்விணையத்தளம் சிறப்பாக அமைய ஒத்துழைத்த அனைத்து இணையக் குழு உறுப்பினர்களுக்கும்,இணைய நண்பர்களுக்கும், கடல்கடந்த அன்பர்களுக்கும், ஆலோசகர்களுக்கும், செய்திகளை அனுப்பி உதவிய நிருபர்கள், நிறுவனங்களின் பிரதிநிதிகள், புகைப்பட கலைஞர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதுடன் இனிவரும் காலங்களிலும் தங்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கிறோம். 

மேலும் விசேடமாக எமது இலாபநோக்கற்ற இம்முயற்சியை ஊங்குவிக்க பல்வேறு உதவிகளையும் அன்பளிப்புக்களையும் வழங்கிய அனைத்து அன்பர்களுக்கும் அமைப்புக்களுக்கும் எமது இதயபூர்வமான நன்றிகள்
Comments