அமைப்பின் ஒன்றுகூடல் காரைதீவு 06 இல் அமைந்துள்ள பல்தேவைக் கட்டடத்தில் (நந்தவன பிள்ளையார் கோவில் பின்புறம்) 29.12.2012 இல் அ.வாகீஷன் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதிகளாக அதிபர்கள் திரு.S. மணிமாறன் திரு.R. ரகுபதி மற்றும் அமைப்பின் ஆலோசகர்களான திரு S.புவனேந்திரன், திரு.S சுரனுதன் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வுகளின் போது
கல்முனை வலயத்தின் சிறந்த அதிபராக ஜனாதிபதியிடமிருந்து 'பிரதீபா பிரபா' விருதினைப் பெற்ற திரு. S.மணிமாறன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். தொடர்ந்து அதிபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து அமைப்பின் புதிய நிர்வாகத்தெரிவும் மதியபோசன விருந்துகளும் இடம்பெற்றன.
|
What's new >