What's new


கொழும்பில் அகிலஇலங்கை இந்து எழுச்சிவிழா கண்காட்சி

posted Feb 11, 2013, 6:39 PM by Sulecshan Logaraju

வீரத்துறவி சுவாமி விவேகானந்தரது 150  ஆவது ஜனன தினவிழாவையொட்டி இந்து ஸ்வயம் சேவக சங்கம் நேற்று கொழும்பில நடாத்திய  மாபெரும் அகில இலங்கை இந்து எழுச்சி மாநாடு கோலாகலமாக நாரஹேன்பிட்ட சாலிகா மைதானத்தில் நடைபெற்றது.அங்கு அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் உள்ளிட்டோர் காண்பதையும் மக்களும் அதனைக் கண்டுகளிப்பதையும்;  படங்களில் காணலாம்.

PicasaWeb Slideshow


info:-THAMBIRAJAH SAHADEVARAJAJAH

வருடாந்த பொதுக்கூட்டம்

posted Feb 10, 2013, 7:17 PM by Zhushinthakoshalan Thirunavukkarasu   [ updated Feb 10, 2013, 7:58 PM ]


பாலயடிவால விக்கினேஸ்வரர்  ஆலய வருடாந்த பொதுக்கூட்டம் ஆனது 02.10.2013 நடைபெற்றது. இதில் ஆலய வரவு , செலவு முன்வைக்கப்பட்டு , புதிய நிர்வாகசபை தெரிவுசெய்யப்பட்டது .இதன் விபரமாக......

தலைவர் :- இ .தங்கராசா 
உபதலைவர் :-மா .சிவசுப்பிரமணியம் 
செயலாளர் :- அ .குமரநாதன்
உபசெயலாளர் :-க .சிவபாதசுந்தரம் 
பொருளாளர் :-சி .முத்துலிங்கம்   

இக்கூட்டத்தின் முடிவில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய கும்பாவிசேகம் நிகழ்வு நடத்தவுள்ளதாகவும்,இதனை முன்னிட்டு பாலயடிவால விக்கினேஸ்வரர்  ஆலய புனரமைப்பு வேலை செய்வதாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.....................

விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மீண்டும் சம்பியன்..

posted Feb 10, 2013, 5:44 PM by Suranuthan Sothiswaran

2013ம் ஆண்டிற்கான காரைதீவு பிரதேச செயலக விளையாட்டுப் போட்டியில் இடம்பெற்ற அணிக்கு 6பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மென்பந்து கிறிக்கெற் போட்டியில் மீண்டும் விவேகானந்தா விளையாட்டுக்கழகம் சம்பியன; ஆனது.

மேலும்  10 வருடங்களுக்கு  மேலாக தொடர்ச்சியாக இப்போட்டியில் சம்பியன்களாகி வருகின்ற விவேகானந்தா விளையாட்டுக்கழகம் மென்பந்து கிறிக்கட்துறைவரலாற்றில் இரு தசாப்தகால வெற்றி நாயகர்கள் என்று கூறினால் மிகையாகாது
காரைதீவு விளையாட்டுக்கழகத்துடன் நடைபெற்ற மேற்படி இறுதிப்போட்டியில் 6 ஓவர்களில் ச.டனிஸ்காந்த் (தனு) அவர்களால் 9 பந்துகளில் பெறப்பட்ட 44 ஓட்டங்கள் மூலம் 89 ஓட்டங்களைப்பெற்று வெற்றிவாய்ப்பை தனதாக்கிக்கொண்டது
.

சென்ற  ஆண்டு  VSC இனால் நடாத்தப்பட்ட பிரமாண்டமான 20 அணிகள் பங்குபற்றிய T-20 கடின பந்து சுற்றுப்போட்டியில் சம்பியன் ஆகியதன் மூலம் அம்பாரை மாவட்டத்தின் தமிழ் மக்களின் விளையாட்டத்துறைக்கு கௌரவத்தினை உருவாக்கிக் க்கொடுத்து சாதனை படைத்த வரலாற்றினை நினைவு கூர்ந்து வெற்றிபெற்ற VSC விளையாட்டு வீரர்கள்களுக்கு, உள்நாட்டு, வெளிநாட்டு அங்கத்தவர்கள் சார்பிலும்  நிர்வாக சபை சார்பிலும் எமது நன்றிகளை எமது ஆதரவாளர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல்
 விளையாட்டுத்துறை முகாமையாளர்,
 விவேகானந்தா விளையாட்டுக்கழகம்,
காரைதீவு

வீரத்துறவியின் ஜனன தின விழாவிற்க காரைதீவிலிருந்து பேராளர்கள்

posted Feb 9, 2013, 9:46 PM by Suranuthan Sothiswaran   [ updated Feb 10, 2013, 5:47 PM ]


வீரத்துறவியின் ஜனன தின  விழாவிற்க காரைதீவிலிருந்து 50ற்கு  பேராளர்கள் கலந்துகொள்ளும் அதேவேளையில் மேற்படி நிகழ்விற்கான பட்டயம் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்து ஸ்வயம் சேவக சங்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பில் 10.02.2013 அன்று இடம்பெற இருக்கின்ற சுவாமி விவோகனந்தரின் 150வது ஜனன தின விழாவிற்கு முத்தமிழ் வித்தகன் சுவாமி விபுலானந்த அடிகளர் பிறந்த காரைதீவு இந்து பெரும் குடிமக்கள் வழங்கும் வாழத்துப்பட்டயம்.
இந்து என்பதில் பெருமிதம் கொள்வோம் ;
அகிலம் போற்றும் இந்துத் துறவி
பாரதத்தை தட்டி யெழுப்பிய பாவேந்தன்
இந்துமதத்தை உயிர்ப்பித்த உத்தமன்
வேதங்களை இலகுவாக்கிய வேதாந்தி
இலட்சிய புருஷர் சுவாமி விவேகானந்தர்
வுங்கத்தின் சிங்கம் சுவாமி விவேகானந்தர்
வேதாந்த சுடர் சுவாமி விவேகானந்தர்
வேதாந்த தீபம் சுவாமி விவேகானந்தர்
இ.கி.மிசனை சிருஷ்டித்த தீர்க்க தரிசி
இ.கி.மிசனை ஈழத்தில் வியாபித்தவர் விபுலணி
விபுலமனி பிறந்தது காரேறு மூதுராம் காரைதீவில்
அவ்வுர் பெருமக்கள் என்று
இந்து மதத்தின் நாம் சிறப்பினை
அமைய வாழ்த்துகின்றோம்
.
இந்துவாக வாழ்வோம்!
இந்து தர்மம் காப்போம்!
கௌரவ தலைவர்       இந்துசமய விருத்தச்சங்கம்       கௌரவ செயலாளர்;;
.மணிமாறன்     அனைத்து ஆலயங்களும்              மு.ஜெயராஜி

சுவாமி விவேகானந்தரின் 150வது ஆண்டு அகில இலங்கை மாநாடு

posted Feb 7, 2013, 11:09 PM by Sulecshan Logaraju   [ updated Feb 8, 2013, 6:25 PM ]


 
10.02.2013 ஞாயிற்றுக்கிழமை
சாலிகா மைதானம், நாராஹன்பிட, கொழும்பு-05
 மாலை 3.00 மணிக்கு

info:-Mr 
THAMBIRAJAH SAHADEVARAJAJAH

காரைதீவின் உயர்தரப் பரிட்சை பெறுபேறுகள் பற்றிய அலசல்…

posted Feb 7, 2013, 10:41 PM by Webteam Karaitivu.org   [ updated Feb 7, 2013, 11:19 PM ]


கடந்தவாரம் வெளியான உயர்தரப் பரிட்சை முடிவுகளின் உத்தியோகபூர்வ முடிவுகள் இவ்வாரம் கிடைக்கப்பெற்றது.
இதன் அடிப்படையிலில் விபுலானந்த மத்திய கல்லூரி , சண்முகா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் விஞ்ஞானதுறை , கலைத்துறையில் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளனர். 

சண்முகா மகா வித்தியாலயத்தை சேர்ந்த உருத்திரன் உமாதாசன் கலைத்துறையில் மாவட்ட நிலையில் முதல் நிலை மாணவனாக சிறந்த பெறுபேறுகளைப் பெற்று காரைதீவுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

மேலும்,
இம்முறை பெறுபேறுகளின் அடிப்படையில் விபுலானந்த மத்திய கல்லூரியில் கலை , கலை அழகியல், கணித விஞ்ஞான துறைகளில் 41 மாணவர்களும், சண்முகா மகா வித்தியாலயத்தில் கலை , கலை அழகியல் துறைகளில் 11 மாணவர்களும் உயர்கல்வி கற்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விபுலானந்த மத்திய கல்லூரியில் உயர்கல்வி கற்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் மாணவர் விபரம்

கலைத்துறை
ம.கஜாயினி-3A
சி.கிரிஜா-2AB
தெ.நிறோஜினி-A2B
தெ.யாழினி-2AB
ந.ஜினோஜிகா-2AB
ம.சசிவேணி-3B
வ.குமுதினி-A2B
இ.கிரிஸ்ரிகா-A2B
பு.ஜீவிதா-ABC
அ.அருணா-ABC
க.ஜெயராஜ்-3B

கலை அழகியல் துறை
ந.கிருஜா-ABC
சி.கஜனி-B2C
சி.நிறோஜினி-BCS
ர.நிதர்ஸனா-B2S
த.பபிதா-2CS
ப.நிறோஜினி-2BC
பி.கபாஸ்கர்-BCS
பு.விஜிதா-C2S
மோ.பாணுகா-2BC
ப.விதுர்சனா-2BC
சோ.டிலானி-2BC
நா.மதுசினி-B2C

கணித விஞ்ஞான துறை
தி.தினோஜா-A2C
தெ.சுகன்யா-B2C
ஜெ.சுகன்யா-B2C
வே.ராஜமோகன்-B2C
கி.தனுஸாந்-3C
யோ.துஜந்திகா-3C
சு.திவ்யா-3C
உ.டனுஸ்கா-3C
கு.ராகுலன்-3C
வி.அபராசிதா-3C
வே.பிரசன்னியா-3C
கோ.குகராணி-3C
ம.நிரஞ்சனா-3C
அ.தர்சனா-3C

சண்முகா மகா வித்தியாலயத்தில் உயர்கல்வி கற்க தகுதி பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படும் மாணவர் விபரம்

கலை,கலை அழகியல் துறை
U.உமாதாசன்-3A
R.சுஜிதன்-2AB
N.நிராஜ்-A2B
P.கோகினி-2AB
Y.தனுஜன்-ABC
T.நுமாராஜன்-3B
A.சரன்யா-A2C
M.துவாரகா-BCS
G.சஞ்சீவினி-A2C
S.கோசல்யா-ACS
M.மதிரூபி-C2S


பிறந்த மண்ணுக்கு புகழ்சேர்த்தோர்

அருள்மொழி பிரணவன் - பொறியியல்பீடம், மட்டக்களப்பு மாவட்டம்
கந்தசாமி அகிலன் - மருத்துவபீடம்,மட்டக்களப்பு மாவட்டம்
இலங்கநாதன் விதுரன் -மருத்துவபீடம்,அம்பாறை மாவட்டம்


இவ்பெறுபேறுகள் எமக்கு திருப்தி அளித்தாலும் கூட,

வருடாவருடம் மருத்துவபீடம், பொறியியல்பீடம் என சாதனைகளோடு தெரிவாகும் எமது மாணவர்களின் நிலை இம்முறை மாறியமை ஏன் ??? 
பரிட்சையில் சித்தி பெறும் ஆண் மாணவர்களின் எண்ணிக்கையில் சரிவு ஏன் ???

இவ்வினாக்களுக்கு எவரும் எவர் மீதும் குறை கூறாமல் , எவரும் எவர் மீதும் பழி போடாமல் தமது திறமையையும் நமது வளத்தையும் சரியாகவும் சிறப்பாகவும் பயன்படுத்தி இனிவரும் காலத்தில் காரைதீவு மண்ணுக்கு புகழ் சேர்ப்போம்………………..காரைதீவு விளையாட்டுக்கழக செயலாளரின் வாழ்த்துக்கள்...........

posted Feb 7, 2013, 8:56 PM by Sulecshan Logaraju


தொடரும் காரைதீவு விளையாட்டுக்கழகத்தின் வெற்றிப்பயணம்…..

புதிய ஆண்டின் முதலாவது கிறிக்கட் சுற்றுப் போட்டியில் வெற்றிக்கிண்ணத்தை கைபெற்றியதில் பெரு மகிழ்ச்சி அடைகின்றது காரைதீவு விளையாட்டுக்கழகம். ஜொலி கிங்ஸ் இளைஞர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற கடினபந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கு எதிராக  இடம் பெற்ற இறுதிப் போட்டியில் எமது கழக வீரர்களின் துடுப்பாட்டம் ,  மிகச்சிறந்த பந்து வீச்சு , சிறந்த களத்தடுப்பின் காரணமாக எதிர் அணிக்கு இருந்த இலகுவான வெற்றி இலக்கை எமது வீரர்களின் அற்பணிப்பு மிக்க முயற்சியால் இறுதிப் போட்டியை தன்வசப்படுத்தினர். 

இவ் வெற்றியானது காரைதீவில் கடினபந்து கிறிக்கட் துறையில் தமக்கன ஓர் இடத்தைக் என்றென்றும் கொண்டுள்ளதென்பதனை மீண்டும் நிறுவித்துள்ளோம். 

மேலும் காரைதீவு விவேகானந்தா விளையாட்டுக்கழகத்திற்கு எதிராக  இரண்டு இறுதிப் போட்டி உள்ளடங்கலாக முறியடிக்கப்படாத ஓன்பது தொடர் வெற்றிகளை இதுவரை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். 

இப் போட்டியை ஏற்பாடு செய்த ஜொலி கிங்ஸ் இளைஞர் விளையாட்டுக்கழகத்திற்கு எமது கழகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மேலும் இவ் வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றிய எமது கழக வீரர்களுக்கும் , எமது கழக ஆதரவாளர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றன். 


 
தகவல் 
செயலாளர் 
காரைதீவு விளையாட்டுக்கழகம்.

Elephant attack.

posted Feb 7, 2013, 7:03 PM by Amareeshan Narendran   [ updated Feb 7, 2013, 8:04 PM ]

வளத்தாபிட்டி GTMS பாடசாலை கடந்தசில நாட்களுக்கு முன் காட்டுயானைகளினால் சேதமாக்கபட்டுள்ளது.

PicasaWeb Slideshow

click here for Photos

விபுலானந்தா மத்திய கல்லூரியில் செவ்வாய்க்கிழமை(11-02-2013) மாணவர் கௌரவிப்பு விழா

posted Feb 6, 2013, 6:27 PM by Sulecshan Logaraju   [ updated Feb 7, 2013, 7:32 AM ]


விபுலானந்தா மத்திய கல்லூரியில் 2012ம் ஆண்டு உயர்தரப்பரிட்சை எழுதி கடந்த வாரம் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற 38 மாணவர்களை கொரவிக்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை(11-02-2013) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் காலை 11.00 மணியளவில் இடம்பெறவுள்ளது. 

அத்தோடு, விபுலானந்தா மத்திய கல்லூரியில் கல்விகற்று 2008ம் ஆண்டுக்கு பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு தெரிவான மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள வைரவிழா கொண்டாட்ட நிகழ்வின்போது 
இடம்பெறவுள்ளது.

தகவல்,
அதிபர்,
விபுலானந்தா மத்திய கல்லூரி

தேசமானிய லங்கா புத்திர விஷ்வகீா்த்தி விருது பெற்ற எமது தவிசாளரை வாழ்த்துகின்றோம்

posted Feb 5, 2013, 2:14 AM by Senior WebTeam

Whole Ceylon Nena Guna Foundation என்ற அமைப்பானது அண்மையில் காரைதீவு பிரதேச சபையின் கெளரவ தவிசாளா் செல்லையா இராசையா அவா்களின் சமூகசேவையை பாராட்டி அவா்களுக்கு தேசமானிய லங்கா புத்திர விஷ்வகீா்த்தி விருதினை வழங்கி கெளரவித்துள்ளது. கெளரவ தவிசாளரை எமது Karaitivu.org இணையக்குழு சார்பாக வாழ்த்துகின்றோம்.


1-10 of 1487