மரண அறிவித்தல்

posted Sep 16, 2012, 9:14 PM by Suranuthan Sothiswaran   [ updated Dec 28, 2012, 7:04 AM ]
காரைதீவு -7ம் பிரிரிவைச் சேர்ந்த  விபுலமணி கணபதிப்பிள்ளை முருகேசு அவர்கள் இன்று காலமானார்.

கணபதிப்பிள்ளை முருகேசு 1920ஆம் ஆண்டு 06 பேர் கொண்ட குடும்பத்தில் 03வதாகப் பிறந்தார். தந்தை கணபதிப்பிள்ளை, தாய் செண்பகப்பிள்ளை. விவசாயக் குடும்பத்தில் பிறந்ததினால் இவரது அடிப்படைத் தொழில் விவசாயமாகப் பின்பற்றப்பட்டது. அவ்வேளையில் பல சமூக சேவை, சமய சேவைகளில் ஈடுபட்டார். மகாவிஸ்ணு ஆலயம் கட்டிட ஆரம்பகாலத்தில் குடிசையால் கோயில் கட்டும் போது கம்பு வெட்டி ஓலை கொய்து உதவி செய்தார். 1950ஆம் ஆண்டில் பிரதேச சபை உறுப்பினர் தேர்வில் வெற்றி பெற்றார்;. அக்காலங்களில் கடற்கரை குடியேற்ற திட்டத்தின் போது அம்மக்களின் நீருக்காக கிணறுகட்டும் பணியில் ஈடுபட்டு உதவி புரிந்தார். காரைதீவு – 05ஆம் பிரிவில் பழைய வைத்தியசாலை கட்டுமானப்பணியில் ஈடுபட்டார்.
2000ஆம் ஆண்டு மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்று சேவை புரிந்தார். வரும் வேளை சமாதான நீதவானாக பதவியேற்றார். இவரது சேவைகளுக்காக 2002ஆம் ஆண்டு சக்தி கல்வி நிலையத்தினால் பழம்பெரும் விவசாயி என்று கௌரவிக்கப்கட்டார். மேலும், விஸ்ணு சனசமூக நிலையத்தினால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். யுருசுனுஊ அம்பாரை மாவட்ட விவசாய திணைக்களத்தினால் விவசாய பயிர்ச்செய்கைக்காக கௌரவிக்கப்பட்டார். கண்ணகி சனசமூக நிலையத்தினால் முதியோர் தினத்தன்று பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். தற்போது மகா விஸ்ணு ஆலய தர்மகத்தாராகவும், விஸ்ணு சனசமூக நிலைய உறுப்பினராகவும் இருந்து சேவை புரிந்து வருகின்றார். 1940ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தும் சங்கத்தின் உறுப்பினர், பலநோக்கு கூட்டுறவுச் சங்க உறுப்பினர், NEHRP வீட்டுத்திட்ட பணியில் காரைதீவு-7 பிரதிநிதி போன்ற பதவிகளையும் வகித்தவர்

Comments