Archive‎ > ‎

கவிதைகள்

**** உங்கள் கவிதைகளை எமது இணையத்தில் பிரசுரிக்க விரும்பின் info@karaitivu.org எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கவும்.
* கவிஞர் N.அகிலன் அவர்கள், எதிர்காலத்தில் காரையம்சன் எனும் புனை பெயரால் அழைக்கப்படுவார்.
****** தயவு செய்து வம்பனின் கவிதைகளுக்கு Comments அனுப்புங்கள். யாரும் Comments அனுப்பவில்லையாம் எனப் புலம்புகிறார்.
* கவிஞர் பா.சிவபாலன் அவர்கள், எதிர்காலத்தில் கவிபாலன் எனும் புனை பெயரால் அழைக்கப்படுவார்.
** படித்துச்சுவைத்த கவிதைகளை பிரசுரிக்கும் போது தயவுசெய்து படித்துச்சுவைத்தவை எனக்குறிப்பிடுக.
கவிதைகள் பற்றிய உங்களது ஆக்கபூர்வமான விமர்சனங்கள் எம்மை மேலும் ஊக்கப்படுத்தும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

காதலர்தின சிறப்பு குறுங்கவிதைகள்- பாகம் 2

posted Feb 13, 2010, 7:04 AM by Ahilan Nadesan   [ updated Mar 15, 2010, 7:36 AM by Prasath Mendis Appu ]


 

காதலே!
இந்த ரோஜாப்பூவை பிடுங்கும்போது
ஒரு கண்டிப்பான உத்தரவு பிறந்தது!
இம்முறையும்
இதை கொடுக்க முடியாது போனால்
இனிமேல் பூக்க மாட்டேன் என்று
அதனால்தானேனும் வாங்கிக்கொள்…

*****************

நீ நடந்து செல்லும் வழியைப்பார்த்து
பூக்களை பரவிவிடவும்
உன் கால்தடங்களைத்தேடி
வேர்களை அனுப்பவும்
இந்த மரம் பழகிவிட்டது…
என்ன அதிசயம்!
உன் பாதங்களில்
மிதிபட்ட பூக்களில் மட்டும்
எறும்புகள் மொய்க்கின்றன…

********************
நிலா
ஆகா எத்தனை அழகு!
உன்னில் உரசிக்கொள்ள தவறிய
மேகங்கள் சேர்ந்து
வடிக்கும் கண்ணீர்தான் மழை!
இந்த நேரத்தில்
சந்திரனில் உயிர்வாழும் கவிஞன்
உன்னைப்பற்றி எழுதிக்கொண்டிருப்பான்…
“நிலா அங்கிருக்க என்பூமி ஏன் தேய்கிறது?”

*****************

பெண்ணே!
அந்த மலை முகட்டிற்குச்செல்
நீயா நிலவா என்று
மேகங்கள் தீர்ப்பு வழங்கட்டும்!

***********************

இந்த வண்ணத்துப்பூச்சியை
இறக்கிவிட்டுப்போகும்
பேருந்து சாரதிக்கும்
நடத்துனருக்கும்
வயது நூறு…
அந்த ஆசனத்தில்
இப்பொழுது இருப்பவனுக்கு
வயது அறுநூறு…

*********************

ஏய் முட்டாள்களே!
இந்த விரிவுரை மண்டபத்தின் நடுவே
ஒர் அழகான தாமரைப்பூ பூத்திருப்பது
தெரியவில்லையா?
அங்கே என்ன படம் பார்க்கிறீர்?
யார் அங்கே முன்னால் நின்று முணுமுணுப்பது?
முட்டாள்களே!-காரையம்சன்-

வாருங்கள் என் கல்லூரிக்கு…

posted Feb 13, 2010, 6:59 AM by Ahilan Nadesan   [ updated Mar 15, 2010, 7:37 AM by Prasath Mendis Appu ]

வாருங்கள் என் கல்லூரிக்கு…

வந்தனம் உங்களுக்கு!
இது தான் என் கல்லூரி
காதல் தேசத்தின் தலைமைப்பீடம்
காதல்கள் விற்கப்படும் கலைக்கூடம்
இதற்கு
பல சாஜகான்களும்
இடைநடுவில் இறந்துபோகாத மும்தாஜுகளும்
உரிமை கோருகிறார்கள்…
இது ஒரு சமாதியல்ல…

உள்ளே வாருங்கள்
இதோ இடப்பக்கம் இருப்பது தான்
“கொமன் றூம்”
ஓய்வு அறை
இங்கே காதலர்கள் ஓய்வெடுத்துக்கொள்வார்கள்
காதல் புகுந்து விளையாடும்
புதுமை பெறும்…
இது காதலின்
கதவு சாத்தாத கருமபீடம்…

இந்த வழியில் இருப்பது
“கொட்ராங்கிள்”
முற்றம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
இங்கே திசைமாறி திரும்பிய
காதல் பறவைகள்
மீண்டும் கைகோர்த்துக்கொளும்
இங்கு இறக்கைகள் சரிபார்க்கப்படும்
அவை மீள இயக்கம் பெறும்…

இதோ பாருங்கள்
இதை பச்சை மரம் என்பார்கள்
காதலிப்பவர்கள் மீது
எச்சமிடாத காகங்களை மட்டும்
அது வளர்க்கிறது…

இந்த மூன்று திசைகளிலும்
விரிவுரை மண்டபங்கள்.
அங்கே அடிக்கடி
தாமரைப்பூக்களும் ரோஜாச்செடிகளும்
மாறிமாறி அடுக்கப்படும்
இடையிடையே
கண்படாமல் இருப்பதற்கும்
கல்லெறி வாங்குவதற்கும்
சிலர் அமர்ந்திருப்பார்கள்
அவர்கள்
முள்ளை பற்றிக்கொண்டு
மலர்களை ரசித்திருப்பார்கள்…

சரி
இந்த வாசலிலிருந்து
இடப்பக்கமாக இருநூறு அடி நடந்தால்
உணவுச்சாலை
காதலர்கள்
இங்கே ஒன்றாக அமர்ந்து
தேநீர் கோப்பையில் தேன் பருகுவார்கள்
தெகிவளை சோற்றை வெள்ளவத்தை உண்ணும்
வெள்ளவத்தைச்சோற்றை தெகிவளை உண்ணும்
கம்பஹா சோற்றை காலி உண்ணும்
காலிச்சோற்றை கம்பஹா உண்ணும்…
காதலால்
ஊர்களுக்கிடையில் உணவுச்சேர்க்கை…
காதலிக்காதவர்கள்
தேநீர் கோப்பையில் தேநீர் குடிப்பார்கள்…

வாருங்கள் மேலே போகலாம்
இதோ இருப்பது தான் நூலகம்
உலகின் பல பாகங்களிலும்
காதலிக்க முடியாதவர்கள்
காதலித்தவர்களை கரம்பிடிக்க முடியாதவர்கள்
எழுதி வைத்த புத்தகங்கள்
அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன…
இது காதல் தோல்விகளின் கல்வெட்டு!
இங்கே
தேவதைகளும் “தேவதையன்களும்”
ஒரே புத்தகத்துள் ஒளிந்திருப்பார்கள்
காதல்
மீட்சி பெறும்
மோட்சம் பெறும்
சில வேளைகளில்
சாட்சியின்றி சலனம் பெறும.;...

அது சரி
நூலகம் வரை வந்துவிட்டீர்கள்
இது வரை என்னைப்பற்றி
எதுவுமே கேட்கவில்லையே
நான் தான்
அந்த மரத்து காகங்களினால்
தேடித்தேடி எச்சமிடப்படுபவன்…

-காரையம்சன்-

கண்ணுக்குள் காதல்

posted Jan 20, 2010, 8:41 AM by Premakumar Nadarajah   [ updated Mar 15, 2010, 7:30 AM by Prasath Mendis Appu ]பார்வையில் பாசத்தை பொழிந்த காதல் நிலவே -உன்
ஒரு நொடி பார்வையில் விழிச்சிறை வைத்தவளே - என்று
காதலன் வர்ணித்த அன்புக்காதலி அவள்- தன்
கண்ணாளனின் கண்ணையே பாத்தவளாய்
காதல் தேசத்தில் அவனை வருடும்
தென்றலாய் வளம் வந்தாள்.
எண்ணிலடங்காத ஆசைகள் உள்ளத்தில் புதைந்து
நகர்ந்தது அக் காதல் பயணம் .
திடீர் அனர்த்தங்கள் ! சுற்றிய தென்றல் -அவனை
சுழல் காற்றா சுழன்றடித்தது .
உள்ளக்காதலை உணர்த்தமுடியாது உகிரை விட துணிந்தான்
விட்டுப்பிரிந்த காதலியை எட்டிபிடிக்க நினைத்து
கிட்ட நெருங்கியும் தொட்டுக்கொள்ள முடியவில்லை
அவள் நிழலைகூட .

நாட்கள் மெல்ல நகர மாதமும் அதனை தொடர
வருடங்களுடன் வயதும் சென்றது.
மாற்றமே இல்லாத புதைந்த நினைவுகள் -அவன் மனதில்
காதலியோ மாற்றான் கைபிடிக்க மணக்கோலத்தில் ஜொலித்தாள்

அந்த நாள் அவள் கையில் சிக்கியது அப்புகைப்படம்
இருந்தன இரு கண்கள் இவருடியது -அவள்
கடந்த காதல் பயணத்தை
மணமாலைதனை வீசி மன்கலக்கொலத்துடன் -ஓடி
அவனை தேடி வருடியவளாய்- அன்று கோபத்தில்
உன்னை பாராது உன் கண்ணை பாத்திருந்தால் - இன்று
எனக்கும் இரண்டு கண்மணிகள் இருந்திருக்கும் அன்றோ என்றாள் !!!!!!!!!!

காதலுடன்..........
 'காரை' ஜெயதாசன் .
 (கோ.ஜெயராஜ்  )

காதல் குறள்

posted Sep 15, 2009, 8:57 PM by Web Team   [ updated Mar 15, 2010, 7:23 AM by Prasath Mendis Appu ]

          நண்பனின் மனத்திரையில் மலர்ந்தவை
K.Jeyaraj

துடுப்பு தேடும் உறவுகள்

posted Jun 4, 2009, 10:18 PM by Ahilan Nadesan   [ updated Jun 4, 2009, 10:25 PM by Prasath Mendis Appu ]

This poem was written for the magazine "Ilanthentral - 2008"துடுப்பு தேடும் உறவுகள்

ஆகாய கருவண்டுக்கூட்டம்

அண்மை வானில் வட்டமிட்டு

பொழிந்த குண்டுமழையில்

அழிந்தது அயல் வீடு

 

என்வீட்டுக்கு மழை வேண்டாம்

இனியுமொரு துன்பம் வேண்டாம்

இறைவா இங்கே வந்துவிடு

அல்லலுற்றேன் அதுகண்டு

 

கட்டியவளை அணைத்துக்கொண்டேன்

கைக்கெட்டியதை பிடித்துக்கொண்டேன்

தப்பிவிட வேண்டுமென்று

அகதி அந்தஸ்த்து பெற்றுக்கொண்டேன்

 

என் வீட்டு முற்றத்தில்

இருந்ததொரு  வாழைத்தோட்டம்

ஒரு குண்டில் உடல் சிதறி

உருக்குலைந்தது அந்த ஏழைத்தோட்டம்

 

விட்டுக்கொல்லையில் ஒரு மாட்டுப்பண்ணை

அழுகுரல் கேட்டு அருகில் வந்தேன்

‘‘நீங்களும் மாண்டிடுங்கள்‘‘

என்றுவிட்டு விலகிவந்தேன்

 

போய்க்கொள்ள ஒரு வழியுமில்லை

தூரத்தில் எந்த ஒளியுமில்லை

வேறுவழி காட்டவென்று

அங்கோர் படகோட்டி நின்றிருந்தான்

 

அருகில் சென்றேன் ஆம் என்றான்

அக்கரை செல்ல வேண்டும் என்றேன்

இக்கரையும் இனியும் வேண்டாம்

கூட்டிச்சென்றிடுவாய் என்றுரைத்தேன்.

 

நடுக்கடலில் நம் பயணம்

ஓட்டிடுவேன் உயிரை வைத்து

எனக்கும் உண்டு பிள்ளை குட்டி- அதனால்

தரவேண்டும் ஏதும் என்றான்.

 

ஐயோ என்ன கொடுமை இது

அடித்தது நெருப்பு மழை

அகப்பட்டது ஒன்றுமில்லை

ஏழையானின் இன்னல் தீர

காட்ட வேண்டும் கருணை என்றேன்.

 

சரியென சமாளித்து

கூலியேதும் வேண்டாம் அந்த

தாலி மட்டும் தந்துவிடு

வழிகாட்டிடுவேன் நானும் என்று

வயிற்றிலடித்தான் படகோட்டி.

 

சொன்ன கதை கேட்டு

சோகத்தில் ஆழ்ந்தது இரண்டு மனம்

காவல் காரன் திரும்பிப்பார்க்க

கழற்றி நின்றாள் கனவுமாது.

 

துடுப்புகள் வலித்துக்கொள்ள

துவண்ட மனமிரண்டு சலித்துக்கொள்ள – இன்னும்

பாக்கு நீரிணை கடக்க வேண்டும்

பாரதம் புகுந்திட வேண்டும்

 

காந்திமகான் வாழ்ந்த நாடு

கலைகளில் செழித்த நாடு

நான்கொண்ட கவலை தீர

தந்திடுமா எனக்கோர் வீடு?

 

-காரையம்சன்-

எனை, நீ பிரிந்தாலும்.......

posted Apr 17, 2009, 6:08 PM by Unknown user   [ updated May 20, 2009, 7:23 PM by Prasath Mendis Appu ]

எனை, நீ பிரிந்தாலும்

அழகான கவிதை போன்றது
உன் இதழ்கள்,
வாசிக்கும் வாசகனாக நான்.

புன்ன‌கை பூ பூக்கும்
பூந்தோட்ட‌ம் உன் இதழ்கள்,
தேன் குடிக்கும் வ‌ண்டாக‌ நான்.

இன்னிசை த‌ரும் வீணை
உன் இதழ்கள்,
இத‌ழ் மேவும் கலைஞனாக‌ நான்.

ந‌ம் காத‌ல் யுத்த‌த்தில்
இத‌ழ்க‌ளே போர்க்க‌ளம்,
முத்த‌ங்க‌ளே ஆயுத‌ம்.

உயிர் உண‌ர்ந்த‌ த‌ருண‌ம் அது,
ஓர் அந்திமாலைப் பொழுதில்
காத‌ல் சொன்ன‌ முத‌ல் நொடியும்,
நீ கொடுத்த‌ முத‌ல் முத்த‌மும்.

எனை, நீ பிரிந்தாலும்
என் ஒவ்வொரு இத‌ய‌த்துடிப்பையும்,
உன் நினைவுக‌ளே முத்தமிடுகின்ற‌து.

 
 
---மயூரதன்---

துளிர்ப்பு

posted Mar 28, 2009, 9:18 PM by Ahilan Sellathurai   [ updated Apr 28, 2009, 11:47 PM by Prasath Mendis Appu ]

 
பட்ட மரம் பட்டுப் போனால்
நட்ட கரம் விடடுப் போகும்...

நட்ட மயிர் விட்டுப் போனால்
சொட்டமயிர் என்று சொன்னாள்...

காதல் எனும் கெட்ட பயிர் முளைத்துவிட்டால்
அவளைவிட்டு என்னுயிர் மாய்ந்துவிட்டால்...

நான் சட்டென்று கெப்புவிட்ட மொட்டமரம் போல்
நட்டவனுக்காய் சட்டென்று தளைத்திடுவேன்...

நான் மறுபடியும் பட்ட மரம் ஆகமாட்டேன்
ஏனென்றால் நான் மறுபடியும் பட்டுவிட்டால்
என்னை நட்ட கரம் விட்டுவிடும்...
 
 
 
by: TSA

என்ன சொல்ல வந்தாய் என்னிடத்தில்…..

posted Mar 28, 2009, 9:00 PM by Unknown user   [ updated Apr 28, 2009, 11:47 PM by Prasath Mendis Appu ]

என்ன சொல்ல வந்தாய் என்னிடத்தில்…..

ஓரப்பார்வை வீசிப்போகும்
இளந்தென்றலே
என்ன சொல்ல வந்தாய்
என்னிடத்தில்

பூமி பார்த்துப்
புன்னகைத்துப் போறவளே
இந்தக் காளையைப் பார்த்து
காதல் சொல்ல வந்தாயா?

பட்டுத்தாவணி
தொட்டுக் கொள்ளும் பாதங்களே
அவளிற்கு ஒருமுறை
அனுமதி கொடுங்கள்
என்னைப் பார்ப்பதற்கு

யாரும் இல்லாத
பொழுது போகுமுன்னே
சொல்லிவிடு பெண்ணே
சொல்லவந்ததை

இல்லையேல்

என்னைத் தொலைத்தபடி நானும்
உன்னைத் தொலைத்தபடி நீயும்
இந்தப் பொழுதை மீண்டும் தேடி
தொலைக்கவேண்டும்
எம் நந்தவன நாட்களை.

 

 
---மயூரதன்---

உணர்ச்சிகளுடன் உன்னோடு.......

posted Mar 16, 2009, 5:35 PM by Unknown user   [ updated Mar 31, 2009, 4:50 AM by Prasath Mendis Appu ]

உணர்ச்சிகளுடன் உன்னோடு.......
 
 
மெளனத்தால் பேச முடியாது
மனத்தினால் மறக்க முடியாது 
உணர்ச்சிகளை உடைக்க முடியாது
ஆசைகளை அழிக்க முடியாது
அன்பை அணை கட்டி விட முடியாது, ஆனால்
என் இதயத்தில் இரத்தமாக வழியும் இவ்வனுபவங்களை உன்னால்
உன்னால் மட்டுமே மாற்ற முடியும்........

 

நன்றி,
நிமலன் .S

 

 

 

அழகுக்கு அவள் இலக்கணம்

posted Mar 15, 2009, 5:00 AM by Prasath Mendis Appu   [ updated Apr 28, 2009, 11:47 PM ]

கருவிழிக் கண்ணழகு
கார் கூந்தல் பேரழகு
சங்குக் கழுத்தழகு
சற்றுக் கீழும் அவள் அழகு
மெல்லிடை மேனியழகு
மேலான பின்னழகு
செவ் வாழைத் தொடையழகு
சேர்ந்து நிற்கும் பாதமழகு
வாய் மலரும் சொல்லழகு
வாடா மலர் அவள் மொத்தமும் அழகே!!......
வம்பன்


 
*** Please post your comments to wampan@karaitivu.org ***

1-10 of 55