Archive >
செய்திகள்
2009ம் ஆண்டு விட்டுச்சென்ற தடங்கள்
2009ம் ஆண்டு விட்டுச்சென்ற தடங்கள் பற்றி எனது வலை பூவில் இட்டுள்ளேன். இப் பதிவில் பகுதி 01, பகுதி 02 என இட்டுள்ளேன். http://premakumar18.blogspot.com/2009/12/2009.html பகுதி 03 அலசல் தொடரும்.... PREMAKUMAR - JUDE |
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக மனித அபிவிருத்தித் தாபனம்
சிறுவர் துஸ்பிரயோகத்திற்கெதிராக மனித அபிவிருத்தித் தாபனம் நடாத்திய சிறுவர் வாரத்தின் இறுதி நாளான நேற்று அம்பாறைக் கச்சேரியில் சிறுவர் விஞ்ஞாபனத்தை அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சுனில் கன்னங்கராவிடம் தாபன இணைப்பாளர் பி.ஸ்ரீகாந் வழங்கி வைத்து கலந்துரையாடுவதையும் அங்கு சிறுவர் நன்னடத்தை அதிகாரி ஏ.உதுமாலெவ்வை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைப்பாளர் வி.சந்திரஸ்ரீ, உதவிக் கல்விப் பணிப்பாளர் விரி.சகாதேவராஜா, தாபன உதவி இணைப்பாளர் எம்.ஜ.றியாழ் ஆகியோர்; கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம். நன்றி. திரு. விரி.சகாதேவராஜா |
திண்மக்கழிவு முகாமைத்துவம் தொடர்பான மக்கள் கருத்தறி மாநாடு
ஜ.நா. யுனொப்ஸ் திட்டத்தின் கீழ் காரைதீவில் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை உடனடியாக ஆரம்பிக்க காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் ந.ஜீவராசா தலைமையில் காரைதீவு விபுலானந்த மணிமண்டபத்தில் நேற்றுமுன் தினம் புதன் கிழமை மக்கள் கருத்தறி மாநாடு மணிமண்டபத்தில் நடைபெற்றபோது தவிசாளர் ந.ஜீவராசா உரையாற்றுவதையும் யுனொப்ஸ் திட்டத்தின் திட்ட இணைப்பதிகாரி டெப்ரா மக்கீன் உரையாற்றுவதைம் திட்ட அலுவலர் வி.சுதாகரன் மொழி பெயர்ப்பதையும் கலந்துகொண்டோரையும் படங்களில் காணலாம். நன்றி திரு. விரி.சகாதேவராஜா |
HAPPY & PROSPEROUS NEW YEAR
we wish all karaitivu people living around the world A HAPPY & PROSPEROUS NEW YEAR
People Association of Karaitivu Canada(PAK) |
மாபெரும் சிறுவர் ஊர்வலம்
சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி மனித அபிவிருத்தித் தாபனம் இன்று வியாழக்கிழமை காலை கல்முனையில் மாபெரும் சிறுவர் ஊர்வலத்தையும் உவெஸ்லிக் கல்லூரியில் சிறுவர் மாநாட்டையும் தாபனத்தின் பணிப்பாளர் பி.பி.சிவப்பிரகாசம் தலைமையில் நடாத்தியது. அங்கு இடம்பெற்ற சிறுவர் ஊர்வலத்தையும் அதிதிகள் கண்டிய நடனம் உவெஸ்லி பாண்ட் வாத்தியம் சகிதம் அழைத்து வரப்படுவதையும் குத்து விளக்கேற்றுவதையும் ஆன்மீக அதிதி வண.சங்கரத்ன தேரர் ஆசியுரையாற்றுவதையும் மாணவர்கள் கலந்துகொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.
|
பிளஸ் கல்வியகத்தில் தசரா விழா
காரைதீவு முன்னணி கல்வியகங்களில் ஒன்றான பிளஸ் கல்வியகத்தில், தேவியரைப் போற்றும் தசரா விழா விழாவின் கல்வித்தாய் சரஸ்வதிக்கான இரண்டாம் நாள் பூசை கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இப்பூசையின் உபயகாரரான திரு. சிவாகரன் அவர்களுடன் கல்வியக பணிப்பாளர்கள், மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர். திரு . சிவாகரன் அவர்கள் இப்பூசை நிகழ்வுகளுக்குரிய சகலவிதமான ஒலிபெருக்கி மற்றும் ஓளியூட்டல் வசதிகளை இலவசமாக வழங்கியிருந்தார்.
மேலும் அம்பாளுக்கு பூசை நடைபெறுவதையும், பிரசாதம் வழங்கப்புடுவதையும் படத்தில் காணலாம்
|
1-10 of 283