தேடியந்திரம் Noobsearch

posted Feb 11, 2010, 6:53 PM by Premakumar Nadarajah   [ updated Mar 15, 2010, 7:37 AM by Prasath Mendis Appu ]
இண்டெர்நெட்டில் அல்டிமேட் தேடியந்திரம் என்னும் அடைமொழியோடு புதிய தேடியந்திரம் உதயமாகியுள்ளது.

கூகுலைத்தவிர வேறொரு தேடியந்திரம் தேவையில்லை என்று இணையவாசிகள் சத்தியம் செய்யத்தயாராக இருந்தாலும் கூட புதியதொரு தேடியந்திரத்தின் மூலம் கூகுலுக்கு சவால் விடும் துணிச்சலான முயற்சிகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. இவை வெற்றி பெறுகின்றனவா என்பது வேறு விஷயம்.

ஆனால் புதிய‌ தேடிய‌ந்திர‌ங்க‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டு கொண்டே தான் இருக்கின்ற‌ன‌. இப்போது அறிமுக‌மாகியுள்ள‌ தேடிய‌ந்திர‌ம் நூப்ச‌ர்ச்.

 கிட்ட‌த்த‌ட்ட‌ மைக்ரோசாப்ட்டின் பிங் தேடிய‌ந்திர‌த்தை நினைவுப‌டுத்தும் வ‌ண்ண‌ம‌ய‌மான பின்ன‌ணியில் அமைந்திருக்கும் தேட‌ல் க‌ட்ட‌த்தில் தேவையான் குறிச்சொல்லை டைப் செய்து தேட‌லாம் . முடிவுக‌ள் ப‌ட்டிய‌லிட‌ப்ப‌டும் வித‌த்தில் எந்த‌ புதுமையும் இல்லை.

ஆனால் தேட‌ல் முடிவுக‌ளை ர‌க‌ம் வாரியாக‌ தேடிக்கொள்ள‌லாம்.செய்தியில் தொட‌ங்கி வ‌லைப்ப‌திவு,விக்கி,ஆடியோ ,அக‌ராதி,பிடிஎஃப் எல்லாவ‌ற்றையும் தேட‌லாம்.

கூகுலுக்கு மாற்று என‌ சொல்ல‌ முடியாது. சும்மா ஒரு மாற்ற‌த்துக்கு ப‌ய‌ன்ப‌டுத்தி பார்க்க‌லாம்.

http://www.noobsearch.com/index.php?page=index

Comments